Monday, March 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv


செம்மையான ஓட்டமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ஊடக வரலாறு கட்டுரை ஒரு கருத்துக் களஞ்சியமாய் எல்லோராலும் சேமித்து வைக்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.

சென்ற பகுதியில் தமிழின் முதல் இதழான " மாசதினச் சரிதை" பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இந்தப் பகுதியில் தமிழின் முதல் வார இதழ் , மற்றும் முதல் நாளிதழ் எது என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

தமிழின் முதல் வார இதழ் :

1852 ம் ஆண்டில் பி.பெர்சிவல் பாதிரியாரால் " தினவர்த்தமானி " என்ற வார இதழ் தொடங்கப்பட்டது என்ற குறிப்பு " மா.சு.சம்பந்தன் " அவர்களின் " தமிழ் இதழியல் வரலாறு " மூலமாக அறியலாம்.


அதே போல் அ.மா.சாமி அவர்களின் " 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் " என்ற நூலின் வழியாக 1855 முதல் " தினவர்த்தமானி " சென்னையில் வார இதழாக வெளிவந்தது என்ற குறிப்பு உள்ளது.


ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. தாய்மொழி செய்தித்தாள் அறிக்கை 1860 களில் வழிவந்த அணித்திலும் " தினவர்த்தமானி " வர இதழ் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது. பிரட்டிஷ் நூலகத்தில் இருப்பது 1861 ம் ஆண்டு இதழ். இதழின் என் 272 . அந்நாளில் சில இதழ்களில் மலர் இதழ் குறிப்பிடுவது இல்லை. தொடங்கிய நாளிலிருந்து இதழ் என் மட்டும் தொடர்ந்து குறிப்பிடுவார்கள். அப்படிப்பார்த்தால் 1855 " தினவர்த்தமானி " வார இதழாக வெளிவந்திருந்தால்தான் 1861 ல் 272 ஆவது இதழாக இருக்க முடியும் ( ஆண்டுக்கு 52 இதழ்கள் ). புதுவைப் பெரும்புலவர் வெ. சவரிராயலுவின் பாடல் தொகுதியில் ( 1904 ) அவரது பாடல்கள் செய்திகள் வெளிவந்த இதழ்களின் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டியலில் சென்னை " தினவர்த்தமானி " 1861 சனவரி 24 நாளிட்டு இதழ் என் 277 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் தினவர்த்தமானி வார இதழ்தான் என்று உறுதிப்படுத்துகிறது. ஆக தினவர்த்தமானி முதல் வார இதழாகக் கருத இடம் உண்டாகிறது. 

முதல் வார இதழ் பற்றிய சில குறிப்புகள் :


இந்த வார இதழுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. அக்காலத்தில் வாரந்தோறும் 784 படிகளுக்குமேல் விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது.


"தினவர்த்தமானி " பெரிய அளவில் 8 பக்கங்கள் கொண்டது. ஆண்டுக்கட்டணம் ஐரோப்பியருக்கு ரூ 5 /- சுதேசியருக்கு ரூ 3 /-. இவ்வார இதழைத் தமிழில் வெளியிடுவதற்கு இதன் ஆசிரியர் ஆங்கிலத் தமிழ் அகராதியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இவ்வகையில் ஏற்பட்ட முதல் முயற்சி இதுவே. 

முதல் நாளிதழ் :


நாள்தோறும் வெளிவந்த செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இதழ்கள் நாளிதழ்கள் ஆகும். 1899 இல் நாளிதழாக வெளியிடப்பட்ட சுதேசமித்திரன் தான் முதல் தமிழ் நாளிதழ் என்ற வரலாறும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. திரு.பெ.சு.மணி தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் கிடைத்த செய்தி மூலம் 1887 இல் லலிதா பிரசனோதையா என்ற நாளிதழ் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


சென்னை மாநில அரசு தாய்மொழி இதழ்கள் பற்றி 1887 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 இதழ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று " லலிதா பிரசனோதயா " .இந்த அறிக்கையில் " சுதேசமித்திரன் " வாரம் இருமுறை இதழாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே " லலிதா பிரசனோதயா " முதல் தமிழ் நாளிதழாகும்.

முதல் நாளிதளின் வரலாறும் பங்களிப்பும் :


பழகால இதழ்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. ஆகவே இதழ்களின் பெயர்களையே அறிய இயலாத போது அவை நாளிதழா , பருவ இதழா என்றறிய இயலாததாக உள்ளது.


"சுதேசமித்திரன் " நாளிதழ் வெளிவருவதற்கு முன்பே பல நாளிதழ்கள் தமிழில் வெளிவந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.


சென்னை அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள தாய்மொழி இதழ் பார்த்தா பொழுது 1879 ஆம் ஆண்டில் " காலக்கணிதன் " என்ற நாளிதழ் வெளிவந்ததாக " அ.ம.சாமி " குறிப்பிடுகிறார். ஆகவே 

*.1879 - காலக்கணதன்.
*.1887 - லலிதா பிரசனதயா.
*.1899 - சுதேசமித்திரன்.

இவ்வாறாக முதல் நாளிதழ் எது என்பதில் குழப்பம் நிலவுகிறது. 


சென்ற நான்கு பகுதிகளில் தமிழ் ஊடக வரலாற்றில் அச்சு ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் வரலாறு பற்றிச் சுருக்கமாக அறிந்தோம். அடுத்த பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு மற்றும் அதன் வரலாறு பற்றி அறிவோம்.  
 
கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


  

9 comments:

அருண் பிரசாத் said...

நல்லா இருக்கு செல்வா

இப்பொதான் படிக்கிறேன். மற்ற பாகங்களையும் படிச்சிட்டு சொல்லுறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த பதிவிற்காக தகவல்களை சேகரிக்க செல்வா நிறைய சிரத்தை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

முந்தைய மூன்று பாகங்களின் இணைப்பையும் இந்த பதிவின் கீழ் கொடுக்கலாமே?

Kousalya Raj said...

//சுதேசமித்திரன் தான் முதல் தமிழ் நாளிதழ் என்ற வரலாறும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. //

எனக்கு இது புது தகவல் ! நாளிதழ் பற்றிய ஒரு தெளிவான தொகுப்பு இது. எது முதல் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறதா ?!

சுவாரசியமாக இருக்கிறது . அடுத்ததாக வானொலி பற்றியா ? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

நன்றி செல்வா.

வைகை said...

தெரியாத பல புதிய தகவல்கள்...
நன்றி செல்வா!

MANO நாஞ்சில் மனோ said...

சொல்லுங்க சொல்லுங்க வருங்கால ரேடியோ ஜாக்கி அவர்களே....

Chitra said...

பயனுள்ள தகவல்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா போய்ட்டு இருக்கு செல்வா.....

சசிகுமார் said...

சிரமப்பட்டு தகவல்களை தேடி கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா பதிவை படிக்கும் போது நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் செல்வா. உங்கள் உழைப்பு வீணாகவில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes