Wednesday, July 27, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (27.7.2011)" என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே....." டீக்கடையின் ரேடியோ கடும் சத்தத்தோடு பாடிக் கொண்டிருக்க....யோவ் டீ பட்டறை சத்தத்தை கொறையுமய்யா......அவரு பாட்டுக்கு பாடிட்டு போய்ட்டாரு...நீதி மறைஞ்சு மறைஞ்சு வரது வாடிக்கையா போச்சு...என்று கூறிக் கொண்டே இரண்டு டீ சொல்லிவிட்டு ரிப்போர்ட்டர் ரெங்குவும், கனகுவும் அமர்கிறார்கள்....ரி.ரெ: என்னயா வெயிலு, கனகு இப்புடி கொளுத்துது ஓய்...! உமக்கு இந்த குளோபல் வார்மிங் பத்தி தெரியுமாய்யா?கனகு: ஆமாய்யா பூமி சூடேறிகிட்டே போகுதாம்....புவி வெப்பமடைதலுக்கு காரணம் ஓசோன் அடுக்குல விழுந்து இருக்குற ஓட்டை... ஓசோன்ல ஓட்டை விழக் காரணம் நாம் பயன் படுத்துற வேதிப் பொருட்கள்ள இருந்து வெளியாகுற கதிரியக்கம்...இதுக்காகத்தான் மரங்களை நடுங்க...மழை நீரை சேமியுங்கன்னு சொல்லி பெரியவங்க எல்லாம் காக்கையா கரையுறாங்க யாரு கேட்டா? இன்னிக்கு நான் நல்லா இருந்தா போதும் எம்புள்ளை, குட்டியெல்லாம் எக்கேடு கெட்டுப் போனா என்னனு நினைக்கிறானுவோ....!ரி.ரெ: வாஸ்தவம்தான் ஓய்...!  இன்னிக்கு வாழ்றத மட்டும் பாத்துட்டு இருக்குற சுயநல மக்கள்ஸ் ஜாஸ்தியாயிட்டாங்க...நம்ம காங்கிரஸ் கட்சி மாதிரி...கனகு: என்னவோய் காங்கிரசுக்கு?ரி.ரெ: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சார் சொல்லிருக்கார், தமிழ்நாட்ல அவுங்க கட்சி தோத்ததுக்கு காரணம் தி.மு.க தானாம்? கொடுமைய பாத்தியா?கனகு: அய்யா இதைக் கேட்டு திருந்திரப் போறாராக்கும்....! ஆப்பசைச்ச குரங்கு மாதிரி போச்சய்யா டமிலினத் தலிவரு நெலமை...! ஆனா...அம்மா என்னதான் டப்பாங்குத்து ஆட்டம் ஆடினாலும் பொழைக்கத் தெரிஞ்ச ஆளுய்யா...

ரி.ரெ: எதவச்சுயா சொல்றா...?கனகு: சரியான நேரத்துக்கு டமிலினத்துக்கு குரல் கொடுக்குறாங்களே அதச் சொன்னேன்...! ஹிலாரி கிளிண்டன் வந்தப்ப இலங்கை அரசு மேல போர்க்குற்றம் சுமத்தணும் பொருளாதாரத் தடை விதிக்கணும்னு கண்டிச்சு சொல்லியிருக்காங்க அதை ஹிலாரியும் க்ளியரா கேட்டுக்கிட்டாங்களாம்....நான் சொல்லலை ஓய்...நம்மூரு பத்திரிக்கைகளும் சொல்லல...அமெரிக்கன் மேகசீன்ல வெளியான ஒரு தகவல் இது...ரி.ரெ: சரியான நேரத்துல அடிச்ச சிக்ஸர்யா இது.. ! 8 கோடி தமிழர்களை ஆளும் ஒரு அரசு இப்படி வேண்டுகோள் வைக்கிறது வரவேற்கவேண்டிய விசயம்தான்...அதே நேரத்துல தமிழ்நாட்டு மேல இன்னும் அம்மாவுக்கு அக்கறை வேணும்யா....புதிய அரசியல் நகர்வுகள், திட்டங்கள்...இப்படி புதுமையான தமிழகத்தை படைக்க ஆவண செய்யணும்...அரச்ச மாவையே அரைச்சு கிரண்டரும் மிக்ஸியும் கொடுத்தா என்னவோய் புரட்சித் தலைவி...!கனகு: இப்போதைக்கு ஹீரோ விஜயகாந்த்தான் ஓய்...கட்சி ஆரம்பிச்ச குறுகிய காலத்துலயே எதிர்கட்சில உட்கார்ந்துட்டார்...காலமும் அவருக்கு கை கொடுத்துடுச்சு...! இப்போ கேப்டன் சார் ...சிஎம். போஸ்ட்டுக்கு குறி வெச்சிட்டு ரவுண்டு கட்டிகிட்டு இருக்காராம்...!!ரி.ரெ: என்ன ரவுண்டுயா...? சரி சரி எந்த ரவுண்டா இருந்தாலும் சரி..பப்ளிக்ல டீசண்டா பிகேவ் பண்ணினா சரிதான்யா! வைகைப் புயல் தான் பாவம் அரசியல் புயல்ல எங்கயோ பிச்சிகிட்டு போய்ட்டாராம்...கனகு: ஆமா லேட்டஸ்ட்டா எதுலயோ படிச்சேன்....விகடன் விழாவுல கலந்துகிட்டு மாணவர்கள் கிட்ட உரையாடினப்ப எல்லோரும் அரசியல் கேள்வியா கேட்டு தொலைச்சுப்புட்டாங்களாம்...நம்ம ஆளு....அரசியல ஆப் பண்ணிட்டேன் அப்பு...ஏதாச்சும் என் வாயைப் புடுங்கி ஆப்பு அடிச்சிடாதிய அப்புன்னு ஓடிட்டாராம்....ரி.ரெ: அவர் அரசியல் பேசுனது ஒண்ணும் தப்பு இல்லை ஓய்....! இப்ப அதுக்காக வருத்தப்படுறதுதான் தப்பு...! சுதந்திர நாட்ல யாரு யாரவேணா ஆதரிச்சு பேசலாம்யா...., ஆனா ஒரு அமைச்சரவையில மத்திய அமைச்சரா இருந்து புட்டு, தான் செஞ்ச செயல்களுக்கு தான் காரணம்கிறத ஒத்துக்காம எல்லாமே..பிரதமருக்கு தெரிஞ்சுதான் செஞ்சேன்னு சொல்லியிருகாரே..இவர்....அவர பத்தி என்ன நினைக்கிற...?கனகு: யாரு ராசாவ சொல்றியாய்யா...! ஏய்யா அந்தாள புடிச்சு பேசிகிட்டு ...எய்தவனெல்லாம் எங்கோ இருக்க அம்பை ஏன் நாம நோகணும்....! ஆனா சன்டிவி கிட்ட அம்மா பண்ற வம்பு மட்டும் செம ரகளையா இருக்குய்யா....ரி.ரெ: நேத்தோட டைம் முடிஞ்சு போச்சு கலாநிதி மாறன் இன்னும் போலிஸ்ல ஆஜர் ஆகலை....! சக்சேனாவ உள்ள வச்சுட்டு முதல்ல மெதுவா கலாநிதிய கல கலக்க வைக்கிறாங்க பாத்தியா...! எல்லாமே.......அரசியலுங்கோ...கனகு: டீ குடிச்சு எம்புட்டு நேரமாச்சு.....காச கொடுத்துட்டு ஓடு ஓய்....இன்னிக்கு ஏதோ புது படம் ரிலீசாம் போய் ரசிகர்கள் கிட்ட விமர்சனம் கேட்டு போடு.....எடிட்டர்கிட்டயும் சொல்லு நம்ம கழுகுல போடச் சொல்லி....நான் கிளம்புறேன்...தலைக்கு மேல வேலை கிடக்கு...ரி.ரெ: ரைட்யா....மீ டூ எஸ்கேப்பு....! ஜினிமா சேதியா கழுகுலயா ...போய்யா போ...வேற வெனையே வேணாம்...என் வேலைக்கி வக்கிற பாத்திய டீசண்டா ஆப்பு.....மீ ஜூட் சாரே.....!

கழுகிற்காக
 தேவா (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


3 comments:

பாலா said...

டீக்கடை களை கட்டியிருக்கு போங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

டீக்கடை ரொம்ப சூடா இருக்கு.

Karthick Chidambaram said...

சூடா இருக்கு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes