Thursday, July 14, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (14.7.2011)

பஞ்ச் 1:

அப்போ அப்போ வர்றானுக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிற மாதிரி குண்டு வச்சு வெடிக்கிறானுக...போய்கிட்டே இருக்கானுக!  தீபாவளி புதுவருஷம் அப்போ மட்டும் உளவு துறை எச்சரிக்கை தரும் ஆனா மத்தநேரம் எங்க இருக்கே தெரியாது. எல்லாம் முடிஞ்சப் புறம் உளவுத்துறை வந்து இது தீவிரவாதிகள் கைவரிசைன்னு கரிக்ட்ட சொல்றானுக...! இந்தியா மிகப்பெரிய நாடு அதுனால கண்டு பிடிக்கறது கஷ்டம்னு எத்தன காலத்துக்கு கதை கேட்டுகிட்டு இருக்கப் போறோமோ தெரியலை.

10 பேரு இருக்க நாட்ல 5 பேரு இன்டலிஜெண்ட் இருந்தான்னு வச்சுக்கோங்க 100 பேரு இருக்க நாட்ல அதே ஆவ்ரேஜ்ல இன்டலிஜெண்டான ஆளுங்க இருக்கணுமா இல்லையா? பலம் இருக்கணுமா இல்லையா? ஏன் இல்லை? அஜ்மல் கசாப்ப என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியாவாச்சும் இருக்கா கவர்மெண்டுக்கு...?

தீவிரவாதிங்க எல்லாம் பிறந்த நாள் ட்ரீட்டா குண்டு வச்சு விளையாடுற ஒரு தேசத்ததான் வல்லரசு கனவு காண சொல்றாங்க இந்த அரசியல்வாதிங்க...! கொசுறா ஒரே ஒரு விசயம்...ராமேஸ்வரத்துல சாவுற உயிர்ங்களுக்கும் இதே மதிப்பு கொடுக்குமா சென்ட்ரலு கவர்மெண்டு?பஞ்ச் 2:

சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கும், சி.எம்க்கும் என்ன கருமம் புடிச்ச சண்டை சச்சரவோ தெரியலைங்க. போன அஞ்சு வருசம் பகுத்தறிவு வாதியான ஐயா எந்த தொந்தரவும் பண்ணாம சங்கரராமன் கொலை வழக்கை காலுக்கு கீழ போட்டு வச்சிருந்தார். இப்போ அம்மா வந்து அதை மறுபடியும் தூசு தட்டி எடுத்துட்டு இருக்கு.

சங்காராச்சாரியார் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி கோர்ட் உத்தரவு போட்டு இருக்கு. இப்போ இதுல என்ன மேட்டர்னா நீதித்துறையும், காவல் துறையும் சுமார் பத்து வருசமா இது பத்தி விவாதிச்சுகிட்டு இருக்காங்க. நீதி இந்த லெட்சணத்துல கிடைச்சா.....எவன் சாமி தப்பு பண்ண மாட்டான்?


பஞ்ச் 3:

மும்பை குண்டு வெடிப்புக்கு ஒபாமா சாப் கடும் கண்டனம் தெரிவிச்சு இருக்கார். லட்சக்கணக்குல தமிழ் மக்கள கொன்னு புட்டு ஒரு தீவிரவாதியே ஒரு நாட்டோட அதிபரா இருக்கான். அவனை எல்லாம் இந்த சர்வ தேச சமுதாயம் ஒண்ணும் சொல்ல மாட்டேங்குது. 

இந்தியா மாதிரி தற்புகழ்ச்சி பண்ணிக்கிற சோ கால்ட் வல்லரசுகள் எல்லாம் இந்த தீவிரவாதிய திருப்பதி வரைக்கும் விட்டு பூர்ண கும்ப மரியாதையும் கொடுக்குறாங்க!  அதான் சார் அப்பவே சொல்லி வச்சுட்டு போயிருக்காங்க...ஏழை சொல்லு அம்பலம் ஏறாதுன்னு...! தமிழ் நாட்டு முதல் அமைச்சர்கள் எல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதறதோட சரி...! அதான் இமெயில் இன்டர்நெட்டுனு வந்துடுச்சே என்னத்துக்கு இன்னமும் கடுதாசி போட்டுகிட்டு....வயித்தெரிச்சலா இருக்கு போங்க!

பஞ்ச் 4:

சிகிச்சைக்கு  பிறகு சூப்பர் ஸ்டார் ஜம்முனு திரும்பி வந்துட்டார். நேத்து நைட் பத்து மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட்டுல வந்த ரஜினிய வரவேற்க சென்னை விமான நிலையத்துல ரசிகர்கள் திரண்டு நின்னது ரஜினியை ரொம்பவே நெகிழ வச்சுடுச்சாம்.

அவரால அரசியல் லாபமும் இல்லாம எந்த ஆதாயமும் பார்க்காமல் ரஜினி ஒருத்தர புடிச்சதுக்காக அவரோட ஆயுள் வரை நிக்கிற ஒரு கூட்டத்த பாத்து கண்கலங்கிப் போய்ட்டாராம். எல்லோரையும் கூடிய சீக்கிரமே சந்திக்கப் போறாராம். எந்த அடையாளமும் இல்லாம ஒரு மனுசனா வாழும் போது நேசிக்கிற ஜீவன்கள் கடைசி வரை  நிக்காமலா போய்டுவாங்க?


பஞ்ச் 5:

அம்பேத்கார் சட்டக்கல்லூரி வாசல்ல நின்னுகிட்டு எல்லா மாணவர்களுக்கும் வை.கோ சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ சிடிய கொடுத்து இருக்கார். சரியான  அணுகுமுறைகளை கடைபிடிக்கிற ஒரு தலைவர அடையாளம் தெரியாம ஒரு மூலையில உட்கார வச்சிருக்கறதுக்கு நாம எல்லாம் சந்தோசப்படணுமா வருத்தப் படணுமான்னே புரியலை.

கல்வி அறிவும், அரசியல் அனுபவமும், மொழிப்பற்றும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட வைகோ மாதிரி ஆளுங்கள தமிழ் நாட்டு சனம் கொஞ்சம் திரும்பி பாத்து இருக்கலாமோ?
 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

3 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

cheena (சீனா) said...

அன்பின் கழுகு - பஞ்ச் அஞ்சுமே சூப்பர் - சிந்திக்க வேண்டிய பஞ்ச்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பாலா said...

பஞ்ச் ஒவ்வொன்னும் நச் நச்சுன்னு இருக்கு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes