மாறி வரும் காலவெள்ளோட்டத்தில் நமதுதமிழ் நாட்டில் ஆட்சிப்பொறூப்பில் மட்டும்அதிகபட்ச மாற்றமின்றிஇரு கட்சிகளுக்குஇடையே மட்டுமேநடக்கிறது தார்மீக போட்டி. ஏன் இப்படி? இந்தஇருவரிடம் மட்டுமேமக்கள் திருப்தி கண்டுவிட்டனரா? இல்லைமாற்றாக ஆள்இல்லையா?
மூளையைத் துளைத்தநமது கேள்விகளை சகபதிவரிகளிடம் கேட்டோம். நீங்களும் தெரிவிக்கலாம்உங்களின் கருத்துக்களைபின்னூட்டங்களின்வாயிலாக..
தமிழ் நாட்டில் ஆட்சி பொறுப்பிற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க தவிர வேறு கட்சிகள் வராமல் இருப்பதற்கு காரணம்?
கே.ஆர்.பி.செந்தில்: கூறியது
தி.மு.க தோன்றியபோது அப்போது மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது.. எம்.ஜி.ஆர் அ.தி.மு.க வை துவங்கியபோது அவர் நேர்மையாக இருப்பார் என மக்கள் நம்பினார்கள், தமிழ் நாட்டில் அப்போதுதான் பெரும்பான்மை மக்கள் இரு கட்சிகளிலும் இருந்தார்கள்..
இப்போது கட்சி என்பதே வியாபார நிறுவனம் ஆகிவிட்டது.. மொத்த குடும்பமும் இயக்குனர் பதவி போல் ஆளாளுக்கு ஒன்று வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறது.. அதனால்தான் மக்கள் வெறுப்பாகி விட்டனர்..
இனிமேல் கட்சி நடத்த வேண்டும் எனில் அம்பானி, மல்லையா போன்ற ஆட்களால்தான் முடியும்.
கேபிள் சங்கர்: கூறியது
வேற எவனும் அரசியல் செய்ய தெரியாததால்
வால் பையன்: கூறியது
இரண்டுக்குமே வரலாறு உள்ளது, அடுத்து காங்கிரஸ் வலுவான இடத்தில் இருந்தாலும் மாநில கட்சிகளிடம் அது ஒப்பு கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, தனித்து நின்றால் போதிய இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை அவர்களை செயல்படுத்த முடியவில்லை! , அடுத்த இடத்தில் இருக்கும் கம்யூனிஸ்டு கொள்கை முரண்பாடுகளால் தமிழகத்தில் அட்ரஸ் இல்லாமல் இருக்கிறது, தமிழகத்தை பொறுத்தவரை கட்சி என்றாலும் சரி, நடிகர் என்றாலும் சரி மாஸ் வேண்டும், அ.தி.மு.க தனது செல்வாக்கை இழக்கும் தினத்தில் தே.மு.தி.க வர வாய்புண்டு, ஆனால் அது அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தால் அதையும் இழக்கும்!
ஜாக்கி சேகர் : கூறியது
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பிறகு தமிழ் மொழியை முதன்மை படுத்தி வந்த கட்சிகள் திராவிட கட்சிகள்.. அதனால்தான் பத்து பைசா பக்கெட்டில் வைத்துக்கொள்ளாத காமராஜரே தோற்கடிக்கபட்டார்...தமிழர்களை எல்லோரும் எமோஷனல் இடியட்ஸ் என்று சொல்லுவார்கள்...மதிய சோறு போட்ட கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு ஆப்பு வைத்தோம், காரணம்.. அவர் சார்ந்து இருக்கும் கட்சி காங்கிரஸ்..திராவிட கட்சிகள் கோலாச்சியதற்கு முக்கிய காரணம் , அவர்கள் மக்களோடு மக்களாக களப்பணி செய்பவர்கள்... வீரமாய் முழக்கமிடுவார்கள்... மொழியை முதன்மை படுத்தினார்கள்....
ஒரு தேர்தல் என்று ஒன்று வந்தால் கரைப்பார் கரைத்தால் கள்ளும் கரையும் என்பது போல் மிக அழகாக பிரசாரம் செய்யபட்டது....காங்கிரச்காரர்கள் நேரு பரம்பரை போல் மக்களிடம் எந்த பிரசாரத்துக்கும் சென்றது இல்லை.
ஒரு திமுக தொண்டனிடம் இரண்டு பரோட்டா, ஒரு வாடகை சைக்கிள் கொடுத்து திமுக கொடியை கையில் கொடுத்தால் அவ்ன் பொழுது சாயும் வரை பிரச்சாரத்தை விட்டு போக மாட்டான்.. ஆனால் கங்கிரஸ்சில் அப்படி அல்ல...மதியம் பதினோரு மணிக்கே தின்னை கிடைத்த இடத்தி தூங்கிவிடுவான்.. காரணம் வட்டம் செயலாளர் எல்லாம் அப்படித்தான் அதனால் தொண்டனும் அது போலவே...
திமுகவில் கீற்று கட்டும் தொண்டன் கூட மிக அழகாக பேசுவதில் வல்லவர்கள்...ஆனால் மற்ற கட்சிகள் அப்படி அல்ல..எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்த போது விளிம்புநிலை மக்கள் அவரை ஒரு பிரதமராகவே நினைத்தனர்... இதுவரை சினிமாவில் செய்த விஷயங்கள் எல்லாம் அவர் நேரிலும் செய்வார் என்று மலை போல் நம்பிக்கை வைத்தனர்..
அதனால் அவரால் படுத்த படுக்கையாக இருந்தும் தேர்தலில் நின்று ஜெயிக்க முடிந்தது..எல்லாவ்ற்றையும் விட தமிழகம் முழுவதும் ஓட்டு போட வரும் ஜனங்கள் அத்தனையும் விளிம்பு நிலை மக்கள்தான் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற நினைக்கின்றார்கள்... அதனால் அவர்கள் மனதில் ஆழமாக இருக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாற்றி வாக்கு அளிக்கின்றார்கள்
நொச்சிக்குப்ப வாக்கு சாவடி எண்ணிக்கையும் பெசனட்நகர் இந்திராநகர் எண்ணிக்கையும் ஒற்றுமை படுத்தி பாருங்கள்.... படித்தவன் எவனும் ஓட்டு போட வரமாட்டான்... அந்த தேர்தல் விடுமுறை நாளை சத்தியம் தியேட்டரில் காதலியோடு படம் பார்க்க விரும்புவான்...
அடிப்படை பிரச்சனை படித்தவன் ஓட்டு போட வந்தால் மட்டுமே இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றும் வரும்... அதே போல்95 சதவீகத வாக்கு பதிவு நடக்கும் போது கிடைப்பது மடுமே உண்மையான ஜனநாயகம் ஆகும்... ஆனால் அது நமது நாட்டில் இது சாத்தியம் இல்லை.
அதுவரை திமுக, ஆதிமுகாவை அடிச்சிக்க முடியாது..
கழுகுக்காக:
உங்கள் சௌந்தர்
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
10 comments:
வேறு எந்த அமைப்பும் அரசியல் கட்சின்ற மாதிரி இல்லாதது. பா.மா.கா மாதிரி கட்சியெல்லாம் என்னதான் தாங்க கட்சின்னு சொல்லிகிட்டாலும் அவங்க இயங்கிறது அவங்க சாதிய பிரதானமா வெச்சுதான். அதுனாலதான் அவங்க சாதி மக்கள் அதிகமா இருக்கற வட தமிழ்நாடுல அவங்களால அரசியல் பண்ண முடியுது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க வில பரவலா அந்த அந்த ஏரியால இருக்கற சாதி காரங்கள புடிச்சு வெச்சுகிட்டு இருக்கறதால அவங்க ராசாங்கம் நடத்தீட்டு இருக்கறாங்க. இப்ப என்னிக்காது மக்கள் எனக்கு சாதியே வேண்டான்னு முடிவு பண்ணினாங்கன்னா அன்னிக்கு ஒரு மாற்றம் வரதுக்கு முகாந்திரம் இருக்கு. ஆனா இந்த திராவிட கட்சிகள் இந்த சாதி பேய அணைய விடாம வெச்சுறுக்க்ற்தால அவங்க வாழ்ந்துகிட்டு இருக்க்காங்க.
தாத்தாவுக்கு பின்னாடி திமுக விலும், செயலலிதாவுக்கு பின்னாடி அதிமுவிலும் மாற்றம் வரும். அப்போ நிச்சயமா புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு. மீண்டும் நடிகர்கள் கையில மக்கள் அதிகாரத்த கொடுத்தாங்கன்னா தமிழ்நாட்ட காப்பாத்துறது ரொம்வ கஸ்டம்.
அரசியலில் எனது நிலைப்பாடு இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது ..!!
மாற்றம் வேண்டும் ஒரு காமராஜர் போன்ற தலைவர் வேண்டும்
மாற்றம் வேண்டும் ஒரு காமராஜர் போன்ற தலைவர் வேண்டும் kandippaaka
நண்பர்களின் இந்த கழுகு விவாத களத்தை இன்றுதான் பார்த்தேன்.
இரு கட்சி ஆட்சி முறை உலகில் பெருமளவில் வெற்றி பெற்று உள்ளது. தமிழன் உலக மாந்தன். அப்படிதான் இருப்பன்.
அமெரிக்காவிலும் இருகட்சி ஆட்சிமுறை - தமிழ் நாட்டிலும்.
இதெல்லாம் சரி - இந்திய அளவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நோக்கி பயணிக்கிற மாதிரி தெரியுது.
திமுக பிடிக்கவில்லை என்று அதிமுக விடம் ஆட்சியை கொடுத்தோம்,அதிலும் திருப்தியில்லை
திரும்ப திமுக விடம் கொடுத்தோம்,அத்தனை இலவசங்களை கொடுத்து,மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தாலும் மக்களுக்கு மறுபடியும் மாற்றம் தேவைபடுகிறது
கூட்டணியில் தான் எல்லாமே இருக்கிறது,கொடநாட்டில் சோனியாவுடன் ஜெ ரகசிய சந்திப்பு நடந்ததாக தெரிகிறது
பார்ப்போம்!
ஒன்னுமே புரியலை. கலைஞருக்கு பிறகு தான் ஒரு புதிய சக்தி உருவாகும் அதாவது சொத்து சண்டையில் திமுக சுக்கு நூறாகி காணாமல் போகும். ஆனால் எனக்கு என்னமோ அடுத்து அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது. ஹ்ம்ம்ம் தலைக்கு மேலே வெள்ளம் . . . சாண் போனாலென்ன? முழம் போனாலென்ன?
முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
நண்பர்களின் இந்த கழுகு தளத்தை இன்றுதான் பார்த்தேன்
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
Post a Comment