Tuesday, July 27, 2010

உயரப் பறக்கையில்.......


மெல்ல சிறகு விரித்து....வலை வானில் வலம் வரத் தொடங்கியிருக்கிறோம். பதிவர்களின் பேட்டிகளும், கருத்துக் கணிப்புகளும், பதிவர்களிடம் இருந்து ஆரோக்கியமான விழிப்புணர்வு பதிவுகளும், அந்த அந்த வாரங்களில் வந்த விழிப்புணர்வு பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்துக் கொண்டும் ஒரு சிறு வட்டமிட்டு கொண்டிருக்கிறோம்.
வலைப்பதிவர்களின் பேட்டிகளில் பல அவர்களின் பிரத்தியோக பாணியில் அமைந்து கல கலப்பாய்.... இன்னும் மிகைப்பட்ட வாசகர்களை கழுகிற்குள் கொண்டு வந்து கழுகின் நோக்கத்தை உணர வைக்கும் ஒரு மையப்புள்ளியாய்...அட்டகாசமான ஒரு வசீகராமாய் இருப்பதாக நண்பர்கள் மூலம் அறியப்பெறுகிறோம். பொழுது போக்காக ஒரு சில விசயங்களைக் கொண்டு நமது நகர்த்தலை தொடங்கியிருக்கும் நமது மையக்கருத்து...மக்களின் விழிப்புணர்வை தூண்டுவதுதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....ஆடாலாம்...பாடலாம்....ஆனால்...
" நாம பாடுற பாட்டும், ஆடுற கூத்தும் ஒரு படிப்பினை உண்டாக்கணும்"

என்ற கவிஞரின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பயனுறும் வகையில் நிறைய செயல்கள் நிகழ்த்த வேண்டியது இன்றியமையாதது என்பதை கழுகு உணர்ந்தே இருக்கிறது. பசியோடு இருக்கும் மக்களுக்கு தெருத்தெருவாய்...போய் உணவளிக்காவிட்டால் கூட பரவாயில்லை...பசிக்கும் உணவளிக்கும் அமைப்புகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம் மேலும் பசியாய் இருப்பவர்களை உதவிசெய்வதற்கென்றே இருக்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்க்கு அறிமுகப்படுத்துவோம்.
குறைந்த பட்சம் எழுத படிக்க தெரியாத மக்களில் யாரேனும் ஒருவருக்கு நமது ஆயுளுக்குள் எழுத்து அறிவிப்போம்.....! மிகப்பெரிய லட்சியங்களை கைக் கொண்டு....பெருமை பேசுவதை விட.. சிறிய சிறிய செயல்களை நம்மால் இயன்ற அளவு செய்வோம்...! விளம்பரம் தேவையில்லை ஒரு தலைவனும் தேவையில்லை.. நமது மனசாட்சி ஒரு மிகப் பெரிய தலைவன்.
நமது திருப்தி மிகப்பெரிய திருப்தி....! இப்படி செய்யப்பெறும் சிறு சிறு தனித்தனி உதவிகள் எல்லாம் மொத்தமாய் ஒரு நல்ல சமுதாயத்தை சமைக்கும். மேலே உள்ள முட்களை வெட்டினால்...வேர்கள் மீண்டும் துளிர்க்கும்...என்பது நாம் அறியாதது அல்ல....! பிரச்சினைகளின் மூலம் அறியாமை...! அந்த அறியாமை அகற்றும் முயற்சியான் நாம் கைக்கொண்டிருப்பது....
எமது குறிக்கோள்....ஒரு மிகப்பெரிய சாதனைகள் அல்ல.. மாறாக சுற்றியுள்ள நமது கண்ணுக்குத் தெரிந்த குப்பை கூளங்களை குப்பைத்தொட்டியில் எறியும் அளவிற்கு சாதாரண முயற்சி.....இடம் சுத்தமாகும் என்று உத்தரவாதம் கொடுப்பதற்கில்லை...ஆனால் இயன்ற அளவு குப்பைகள் அகற்றுவோம்....அதன் விளைவு என்னவாயிருக்கும் நீங்களே யூகியுங்கள்...!
வாழ்வது...ஒரு சில கணங்களாக வேண்டுமானால் இருக்கட்டும்....ஆனால்...அந்த கணத்திலும் ஒளி கொடுத்து மடியும்...தீக்குச்சியாய் நாம் இருப்போம்.....
கழுகு கூட ஒரு தீக்குச்சிதான்...! வெல்வதற்கு.....எவ்வளவோ இருக்கிறது.....எல்லையில்லா வானம் நோக்கி சிறகு விரிப்போம்...வாருங்கள் தோழர்களே...!

(கழுகு இன்னும்.... உயரபறக்கும்)

29 comments:

க ரா said...

உறுதியாக எனது பங்கும் இதில் இருக்கும்

வால்பையன் said...

//எமது குறிக்கோள்....ஒரு மிகப்பெரிய சாதனைகள் அல்ல.. மாறாக சுற்றியுள்ள நமது கண்ணுக்குத் தெரிந்த குப்பை கூளங்களை குப்பைத்தொட்டியில் எறியும் அளவிற்கு சாதாரண முயற்சி..//

மிகச்சரியா சொன்னிங்க தல!
மலை ஏறுவதற்கும் முதல் படியில் கால் வைக்கனுமே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உறுதியாக எனது பங்கும் இதில் இருக்கும்

///

naanum...

கழுகு said...

இராமசாமி கண்ணன்..@ நன்றி தம்பி...!

கழுகு said...

வால்பையன்...@ நன்றி தல..!

கழுகு said...

ரமேஷ்...@ நன்றி தம்பி...!

ஜீவன்பென்னி said...

Mr.கழுகு உங்களுடன் எப்பொழுதும் இருக்கின்றேன்.

அருண் பிரசாத் said...

கண்டிப்பாய் கை கோர்ப்போம்

jothi said...

என் போன்ற பதிவர்கள், விரும்புவது இதைத்தான் " ஒளி கொடுத்து மடியும்...தீக்குச்சியாய் நாம் இருப்போம்.... " வளர்க உங்களின் சமூகப்பணி..............

Unknown said...

கண்டிப்பாய் கை கோர்ப்போம்.

Kousalya Raj said...

கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து, தடம் மாறாமல் பயணித்து இலக்கை அடைவோம்.....

வெற்றி நிச்சயம் தோழர்களே.

வாழ்த்துகள்.

Chitra said...

எமது குறிக்கோள்....ஒரு மிகப்பெரிய சாதனைகள் அல்ல.. மாறாக சுற்றியுள்ள நமது கண்ணுக்குத் தெரிந்த குப்பை கூளங்களை குப்பைத்தொட்டியில் எறியும் அளவிற்கு சாதாரண முயற்சி.....இடம் சுத்தமாகும் என்று உத்தரவாதம் கொடுப்பதற்கில்லை...ஆனால் இயன்ற அளவு குப்பைகள் அகற்றுவோம்....அதன் விளைவு என்னவாயிருக்கும் நீங்களே யூகியுங்கள்...!

வாழ்வது...ஒரு சில கணங்களாக வேண்டுமானால் இருக்கட்டும்....ஆனால்...அந்த கணத்திலும் ஒளி கொடுத்து மடியும்...தீக்குச்சியாய் நாம் இருப்போம்.....


...... கழுகு பார்வையில், "ஒளி"மயமான எதிர்காலம் தெரிகிறது!
தொடர்ந்து கழுகு "உயர்ந்து" பறக்க, வாழ்த்துக்கள்!

AltF9 Admin said...

Ithu varai pona nadkal pothum , inimel vaalvom marravakalukkum payanadaiyum vakaiyil , mmm kilappunkal .....

கழுகு said...

ஜீவன் பென்னி..@ உணர்வுக்கு நன்றி தம்பி...!

கழுகு said...

அருண் பிரசாத்...@ நிச்சயாமாய் செய்வோம் தோழர்...!

கழுகு said...

ஜோதி...@ உங்களின் கோபம் புரிகிறது....கை சேர்ப்போம் தோழர்!

கழுகு said...

கலா நேசன்.. @ நன்றி தோழர்!

கழுகு said...

கெளசல்யா..@ இலக்கை எட்டும் உறுதிகொடுத்தமைக்கு நன்றி தோழி!

கழுகு said...

சித்ரா...@ உங்களின் ஊக்கமும் உறுதியும் நிச்சயம் பறக்க வைக்கும் உயர உயர... நன்றி தோழி!

கழுகு said...

சிவா @ கண்டிப்பாய் தம்பி..மாற்றம் மனதில் வந்தால்....புறத்திலும் நிச்சயம் வரும்..!

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் ! வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சேவை பயணம்
.

ஜெய்லானி said...

நல்ல விஷயந்தான் தொடருங்கள்..தொடர்கிறோம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கண்டிப்பாய் கை கோர்ப்போம்...

எல் கே said...

kandipa en support undu.. nethu nan potta comment kanom

ஜில்தண்ணி said...

உயரப் பறப்போம் :) கழுகோடினந்து

விஜய் said...

நான் பாராட்டியே ஆக வேண்டும், வீசி எரியும் ஒவ்வொரு கல்லும் தவறான குறியில் சென்றாலும்,என்றாவது ஒரு கல்லின் குறி இலக்கை அடித்து நொரிக்கியே தீரும்,கற்கள் தொடர்ச்சியாக வீசப்பட்டதேயானால்...
அதுபோல தான் நமது கழுகும்,என்றாவது ஒரு நாள் அடிப்படை கல்வியாயரிவாலனையும் சென்றடையும்...

வாழ்த்துக்கள்

செல்வா said...

///
மாறாக சுற்றியுள்ள நமது கண்ணுக்குத் தெரிந்த குப்பை கூளங்களை குப்பைத்தொட்டியில் எறியும் அளவிற்கு சாதாரண முயற்சி.....இடம் சுத்தமாகும் என்று உத்தரவாதம் கொடுப்பதற்கில்லை...ஆனால் இயன்ற அளவு குப்பைகள் அகற்றுவோம்....அதன் விளைவு என்னவாயிருக்கும் நீங்களே யூகியுங்கள்...!///

நிச்சயம் செய்தே ஆகவேண்டிய ஒன்று ..!!

Unknown said...

வாழ்த்துக்களும்.. பாராட்டுக்களும்... தந்த, தரப்போகும் அனைவருக்கும் நன்றிகள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes