Friday, July 30, 2010

பாலித்தீன் அபாயம்.....கழுகு கண்ணோட்டம்!




அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் ஒராயிரம் நிகழ்வுகளில் சரி தவறு என்று தெரியாமலேயே.. நாமும் ஒரு சில விசயங்களில் நமது பங்களிப்பை செலுத்தி விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு விசயம்தான் பாலீத்தீன் பைகளின் பயன்பாடு. ஏனொ புரியவில்லை இது ஒரு நாகரீகம் என்று மக்கள் மனதில் எப்படி பதிந்தது?
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாலீத்தீனும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அரக்கன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பாலித்தீன் பைகள் மண்ணுக்குள் புகுந்து பூமித்தாயின் சுவாசத்தை நிறுத்தும் எமன் என்பது தெரியாமலேயே....சட்னி, சாம்பார் வாங்குவதில் இருந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்குவது வரை பாலித்தீனின் உபோயகம். ஒன்று இதன் அபாயம் யாருக்கும் தெரியவில்லை இரண்டு தெரிந்தவர்கள் சொல்லமுயல்வது இல்லை மூன்று எனக்குத்தான் ஒன்றூம் இப்போது ஆகவில்லையே என்ற அலட்சியம்?


எல்லாவற்றுக்கும் நாம் துணிப்பைகளையே பயன்படுத்தியது மறந்து போய்விட்டதா தோழர்களே.....? பாலித்தீன்....அழிக்க் முடியாத அசுரன்....இந்த பூமிக்குள் நீர் செல்லமுடியமலும் உள்ளிருந்து வெளியே வரமுடியாமலும் நடுவிலேயே நிறுத்தி வைக்கும் அபாயம் தெரியுமா? அடுத்த முறை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது பாலித்தீன் பைதான் கொடுப்பார்கள்......கவனமய் கருத்தில் கொள்ளுங்கள்..... இப்படியே போனல்...பூமியின் எலும்புக்கூட்டைத்தான் நம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம்.....
நமது பிள்ளைகள்.....பேரப்பிள்ளைகள்.....எல்லாம் செழிப்பாய் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால்....பாலித்தீன் பைகளை நிராகரியுங்கள்.....!
தம்பி கோமாளி செல்வாவிடம் இது பற்றி சொன்ன போது துடி துடித்துப் போய் அவரின் உணர்வை பங்களிப்பாக்கி கொடுத்த கட்டுரை இதோ...


காட்சி விளக்கம்:

இன்றைய காலகட்டங்களில் கண்ணாடிப் பைகள் என்பது நம் வாழ்வின் ஓர் அங்கமாகிப்போனது. அதன் ஆபத்து தெரியாமலே நாம் அதனை காசு கொடுத்து வாங்கிகொண்டிருக்கிறோம் இந்த கண்ணாடிப் பைகள் மண்ணில் மக்கிப் போவதில்லை என்பதே நமது ஐயத்திற்கு காரணமாக இருக்கின்றது. இதனால் மண் வளம் பெரிதும் பாதிப்படைகிறது. சாக்கடைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இக்காகிதப்பைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும் இவைகளால் மழை நீர் பூமிக்குள் செல்வது பெரிதும் தடுக்கப்படுகிறது. இவைகளை கால்நடைகள் விழுங்கிவிடுவதால் நாளடைவில் அவைகள் இறந்துவிடுகின்றன. நிச்சயம் இம்மாசுக்கேட்டினைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


உங்கள் பகுதிகளில் இது போன்ற பல சுற்றுச்சூழல் மாசுபாடுகள் இருக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியினைத் தேர்வு செய்து அந்தப் பகுதியில் கொட்டப்படும் கன்னாடிப்பைகளின் அளவினை மாதம் ஒரு முறை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஓராண்டு கழித்துப் பார்த்தால் அதற்குள் எத்துனை மக்காத குப்பைகள் கலந்து சுகாதாரக் கேட்டினை விளைவித்திருக்கிறது என்பது உங்களுக்கு கண்கூடாகத்தெரியும்.




இக்காகிதப்பைகளை தெருவிலும் சாக்கடைகளிலும் வீசாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் அல்லது இக்கண்ணாடிப்பைகளை உபயோகிக்காமல் இருக்க வேண்டும்.
இக்காகிதப்பைகளை உபயோகிக்காமல் விடுவதை விட இதற்க்கான மாற்றுப்பொருள் ஒன்றினை கண்டுபிடிப்பதே சிறந்ததாக இருக்க முடியும்.

கழுகிற்காக
செல்வா -

(கழுகு இன்னும் உயர பறக்கும்)

19 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு...

சிறகுகள் விரியட்டும் சிகரம் தொடும் வரை...

Unknown said...

பாலிதீன் பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் மறுசுழற்சி முறையில் டீசலாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பு நடந்து முதன்முறையாக மகாரஷ்டிரா மாநிலத்தில் அதனை செய்யப் போகிறார்கள்.. கூடிய விரைவில் இந்த தகவல் ஊடகங்களில் நீங்கள் பார்க்கலாம்..

நிறுவனத்தின் விதிமுறைகளால் இதற்கு மேல் நான் தகவல் சொல்ல இயலாது...

வால்பையன் said...

சென்ற வார ஆவியில், கன்னியாகுமரியில் பாலிதீன் பைகள் பயன்படுத்தினால் 10௦0 ரூபாய் அபராதம் என்ற கட்டுரை படித்தேன், சில நேரங்களில் சுற்றுசூழல் பாதுகாப்பை கொஞ்சம் அழுத்தத்துடன் தான் செய்ய வேண்டியிருக்கிறது!

அருண் பிரசாத் said...

அபராதம் விதிப்பதை விட, கட்டணமாக்கலாம்.

இங்கு, மொரீசியஸ்யில் எந்த கடைக்கு சென்று பொருள்வாங்கினாலும் அதை நீங்கள் உங்கள் பைகளில்தான் வாங்க வேண்டும். பாலித்தீன் பை தேவையானால் ஒவ்வொரு பைக்கும் 2 ரூ கொடுக்க வேண்டும், அந்த பணம் அரசாங்கத்திற்கு சென்றுவிடும். இது சட்டம். பையில் நீங்கள் உங்கள் கடை விளம்பரம் செய்து கொள்ளலாம்.

அட்டை பெட்டி இலவசமாக கொடுக்கிறார்கள்

Anonymous said...

நமது பிள்ளைகள்.....பேரப்பிள்ளைகள்.....எல்லாம் செழிப்பாய் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால்....பாலித்தீன் பைகளை நிராகரியுங்கள்.....!
sorry we are not ready for this,
we are Lacee fellows we need a money when i got a money that time every think in my bottom.

now it self i can change my life.

செல்வா said...

///பாலிதீன் பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் மறுசுழற்சி முறையில் டீசலாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பு நடந்து முதன்முறையாக மகாரஷ்டிரா மாநிலத்தில் அதனை செய்யப் போகிறார்கள்.. ////

அப்படியொரு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சிதான் அண்ணா ..!!
நிச்சயம் ஒரு தீர்வு தேவைப்படுகிறது ..!!

செல்வா said...

/// சில நேரங்களில் சுற்றுசூழல் பாதுகாப்பை கொஞ்சம் அழுத்தத்துடன் தான் செய்ய வேண்டியிருக்கிறது! ///

எவ்வாறேனும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ...!!

செல்வா said...

///அட்டை பெட்டி இலவசமாக கொடுக்கிறார்கள்///
இந்தியாவிலும் இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் ...!!

விஜய் said...

தம்பி , பெருமையாய் இருக்கிறது,
மாற்றங்கள் அப்டிங்கறது எல்லோருக்கும் வரணும், நமது கடமை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வழி செய்யணும், அதை நீ அழகா செய்து இருக்க ....அருமையானா பதிவு,

Kousalya Raj said...

இங்கே நெல்லையில் கலெக்டர் அதை பயன்படுத்த கூடாது என்று உத்தரவு போட்டு உள்ளார், இருப்பினும் ஒரு சில இடங்களில் பயன்படுத்தபட்டுதான் வருகிறது. என்ன சட்டம் போட்டாலும் நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்....

நண்பர் செந்தில் சொன்னது போல் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்......

நல்ல பகிர்வு,

ஜீவன்பென்னி said...

செந்தில் அண்ணே சொல்லுற மாதிரி செஞ்சாலும் குப்பைக்கு பதிலா காற்றுல மாசுபாடு அதிகரிக்கப்போகுது டீசல் மூலமாக. குப்பைய காசாக்குற வேலை அது. பாலிதீன் உபயோகத்த அத்தியாவசியத்தேவைக்கன்றி பயன்படுத்த தடை விதிக்கனும். மருத்துவத்துறையில்தான் அதன் பயன்பாடு முக்கியமான ஒன்றா இருக்கு. திருச்சியில் சாரதாஸ் மஞ்சள் பை ரொம்ப பிரபலம். ஆனா இன்னைக்கு மஞ்சள் பைய எடுத்துட்டு போன இல்லாதவன் தான் எடுத்துட்டுப்போவன் அப்புடிங்குற மனநிலை நிறையப்பேருக்கு இருக்கு. கடைக்கு கைவீசிக்கிட்டு போய் எல்லாம் வாங்கிட்டு கேரி பேக் இருக்கான்னு ரொம்ப பந்தாவோட கேட்டு அதுல வாங்கிட்டு வருவதை நிறுத்தினாலே அதுவே பெரிய முன்னேற்றமா இருக்கும். இன்னோர் விசயமும் நியாபகத்துக்கு வருது முன்னாடி நான் இறைச்சி வாங்குறதுக்கு தூக்கு எடுத்துட்டு போவேன், இப்போ கைய வீசிக்கிட்டு போறேன் எல்லாம் பிளாஸ்டிக் மயம்.

ஜில்தண்ணி said...

இந்த மக்கா பிளாஸ்டிக்கின் உபயோகம் சுத்தமாக தடுக்க வேண்டும்

இப்போது பாலிதின்களில் மக்கும் தன்மை கொண்ட கிட்டதிட்ட பேப்பர் போலவே உள்ள பைகள் பயன்பாட்டில் வர ஆரம்பித்திருக்கிறது

தண்ணிர் பாக்கெட் மற்றும் பாட்டில் தான் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது

இதை எப்படி குறைப்பது ??

அதை போல் மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது மக்கக்கூடிய பிளாஸ்டிக்கை தயார் செய்யும் தொழிற்சாலைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்

அப்போது தான் இந்த பூமியை காப்பாற்றலாம்

க ரா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.. வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு...

Chitra said...

கழுகு, கலக்குகிறது! Keep Rocking!

Karthick Chidambaram said...

நீங்கள் எழுதி உள்ளது எல்லாம் உண்மை என்றாலும். பாலிதின்களால் சில நல்லவைகளும் உள்ளன.
மதுரை கல்லூரி ஒன்றில் நடந்த ஆய்வை பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன்.

சில ஆய்வுகள் இவற்றின் நன்மைகள் பற்றி சொல்ல ஆரம்பித்து உள்ளன.
நீங்கள் சொல்வதெல்லாம் மாற வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன்.

ஹேமா said...

4-5 பதிவுகளை ஒன்றாக வாசித்தேன்.அத்தனையும் சமூகத்துக்குத் தேவையான பதிவுகள்.பதிவாளர்கள் எல்லோருக்குமே பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் said...

4-5 பதிவுகளை ஒன்றாக வாசித்தேன்.அத்தனையும் சமூகத்துக்குத் தேவையான விழிப்புணர்வு பதிவுகள்.பதிவாளர்கள் எல்லோருக்குமே பாராட்டுக்கள்.

ஜெயந்தி said...

இதை அரசாங்கம் தடை செய்தால்தான் தெருவில் கிடக்கும் பாலீதீன் கவர்களை ஒழிக்க முடியும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes