Wednesday, June 08, 2011

சன் டி.வி நடத்தும் மாயா பஜார்.... ஒரு அதிரடி கட்டுரை!


ஊடகங்கள் மக்களின் மனதில் புகுந்து பெரும் மனோ மயக்கத்தை ஏற்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக மனித சிந்தனைகள் மாறிப்போவதும் நாம் கண் முன்னால் கண்டு கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு...

சன் டி.வி என்னும் ஒரு சக்தி வாய்ந்த பொழுது போக்கு ஊடகத்தின் பின்னால் எவ்வளவு இருக்கும் அரசியலை சாமானியர்கள் அறிவது சிறிது கடினம்தான். சுமங்கலி கேபிள் விஷன் என்ற பெயரில் இன்று விஸ்வரூபம் எடுத்து இருக்கும் சன் குழுமம் பற்றிய சில உண்மைகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்...!

 

முதன் முதலில் தமிழ் நாட்டில் பப் (pub) கலச்சாரத்தை கொண்டு வந்தவர்கள், தான் இந்த மாறன் சகோதரர்கள். இவர்களுக்கு தொலைக்காட்சி தொடங்கும் ஆலோசனை, உதவி, வியாபார யுக்திபண உதவி, என அனைத்தும் செய்து  கொடுத்தவர் கலைஞர். ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது கதை போல், இவர்கள் செய்தார்கள். தன் வினை தன்னை சுடும் என்பது போல்  இவர்களுக்கே  இப்பொழுது திரும்பி உள்ளது.தூர்தர்சனில் ஒளியும் ஒலியும் பார்த்து கொண்டிருந்த நமக்கு, அன்று தான் அறிமுகமானது சன் டிவி. முன்பெல்லாம் கேபிள் டிவி இணைப்பு என்று சொல்ல மாட்டோம் சன் டிவி இணைப்பு என்றே சொல்வோம், இப்பொழுதும் பல வீடுகளில் சன் டிவி இணைப்பு என்று தான் சொல்கிறார்கள்.

.

தி மு க வின் செல்வாக்கு மிக்க தலைவராக தன்னை  காண்பித்து கொள்ள கருத்து கணிப்பை நடத்தினார்கள். கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அதை வெளியிட்டார்கள், அதனால் அப்பாவி உயிர்கள்  பலி ஆனது. அதில் ஆரம்பமான  சண்டை தான் இன்று நடக்கும் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

தமிழ் நாட்டின் ஆட்சியை கலைக்க உத்தரவு இட வேண்டுமா...? என்றார் தயாநிதி மாறன் பதவி பறிக்கப் பட்டதுதனி தொலைக்காட்சி ஆரம்பிக்கப் பட்டதுசில வருடத்திலே ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஆரம்பமானது. ஸ்பெக்ட்ரம் பற்றி விரிவாக தனது தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள் அதனாலயே சாமானிய மக்களுக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றி தெரியவந்தது. இப்படி நல்ல காரியத்தை செய்த இவர்கள் தான், முதன் முதலில் அந்த துறையை எவ்வாறு கையாளலாம் என்று தெரிந்து கொண்டவர்கள்.


தெரு ஓரத்தில் இருக்கும் கேபிள் டிவி முதல், பெரிய பெரிய நிறுவனத்தை மிரட்டுவது இவர்களின் வாடிக்கை. இவ்வாறு சன் டிவியின் தில்லு முள்ளு ஏராளம்


சன் டிவி ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் கேபிள் டிவியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்கள். இதன் காரணமாகவே  சன்டிவி இதுவரை முதல் இடத்தில் இருக்கிறது. தனக்கு எதிராக ஒரு டிவி சேனல் தொடங்கப்பட்டால் அவை ஆறு மாதம் மட்டுமே இருக்கும் எந்த ஒரு தொலைக்காட்சியையும் இவர்கள் வளரவிடுவதில்லை, நடிகர் சங்கம் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது அந்த தொலைக்காட்சி மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை, காரணம் இவர்கள் கட்டுபாட்டில் கேபிள் டிவி இருப்பது தான்.   


சன் டிவி முதல் இடத்தில் இருக்க இவர்கள் செய்யும் லீலைகள்

*  இவர்களுக்கு எதிராக தொலைக்காட்சி தொடங்கினால் அவை தரம் மிக குறைவாக இருக்கும், எப்போதும் நோ சிக்னல் என்றே காண்பிக்கும்,


*  ஏதாவது ஒரு புது படம் போட்டால் அப்போது அந்த சேனல் இருக்கும் இடம் தெரியாது... சன் தொலைக்காட்சியில் அதே நடிகர் நடித்த திரைப்படம் போடுவார்கள்.


*  சன் டிவிக்கு படம் ஒளிபரப்ப இவர்களுக்கு உரிமை தரவில்லை என்றால் அந்த படத்தின் பாடல்கள் இவர்கள் ஒளிபரப்ப மாட்டார்கள் அப்படம் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராது.


* தொடர்ந்து ஒரே நிறுவனம் சன் டிவிக்கு ரெண்டு படங்களை தரவில்லையென்றால் , விமர்சனம் பாடல்கள் எதுவும் சன் டிவியில் வெளியிட மாட்டார்கள்.


*  ஒரு சில வருடங்களுக்கு முன்பு சன் மியூசிக் சேனலில் அஜித் பாடல்கள் இவர்கள் ஒளிபரப்பியதே இல்லை காரணம் அஜித் படங்களை சன் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவில்லை என்பது தான். கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகு ஒளிபரப்பினார்கள். 

*  ஏஞ்சல் டிவி என்று கிஸ்துவர்களுக்கு கான தொலைக்காட்சி ஒன்று உள்ளது, அதை சன் DTH ஒளிபரப்பு செய்ய ஒரு கோடி ரூபாய் கேட்டு இருக்கிறார்கள். அது ஒன்றும் விளம்பரம் மூலம் வருவாய் வரும் சேனல் அல்ல.

*  ஒரு தொலைக்காட்சியில் புதிய ரஜினி படம் போட்டால் இவர்கள் உடனே படையப்பா படம் போடுவார்கள், வேறு தொலைக் காட்சியில் விஜய் படம் போட்டால் சன் தொலைக்கட்சியில் கில்லி படம் போடுவார்கள்.முன்பெல்லாம் சன் டிவியை பார்த்து மற்ற சேனல்கள் அதே போல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும். இப்பொழுது மற்ற சேனல்களை பார்த்து சன் டிவி அதே போல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கினார்கள்  அதிலெல்லாம் தோல்வியையே சந்தித்தது.


ஆஸ்கர் பிலிம்ஸ், கலை புலி தாணு, இவர்களின் புதிய படங்கள் வந்தால், சன் டிவியில் பாடல்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள் காரணம் இவர்களுக்கு படம் விற்பனை செய்யாமல் இருப்பது தான்.


இப்பொழுது கலைஞர் டிவி தான் சன்டிவிக்கு போட்டி, அதனால் இவர்கள் கலைஞர் டிவியை ஒழிக்க சதி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எப்படியோ ஒரு திருடனை மாட்டி விட, இன்னொரு திருடன் மாட்டி கொள்ள போகிறான்.

கலைஞர் டிவி வரும் வரை சன் டிவியின் ஆட்டம் அதிகமாக இருந்தது. பிறகு கொஞ்சம் ஆட்டம் நின்றது ஆனால் அது முழுமையாக நிற்கவில்லை..... எந்த டிவியின் ஆட்டம் நிற்க போகிறது என்று பார்ப்போம்.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 

11 comments:

Anonymous said...

இவை எல்லாவற்றையும் இவர்களின் வியாபார யுக்தி , அவர்களின் திறமை என்று வாதத்திற்காக, வைத்துக்கொண்டாலும்
குறைந்தபட்சமாக மக்கள் விழிப்புணர்வுக்காக எதையேனும் குறிப்பாக செய்கிறார்கள் என்று ஏதாவது இருக்கிறதா?
இன்றைய காலகட்டத்தில் ஊடகம் மிகப்பெரும் சக்தி... இவர்கள் குறைந்தபட்சம் மனது வைத்தாலே மக்களின் அநேக அறியாமைகளை நீக்க இயலும்.. ஒரு சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் பெயர்கள் மக்கள் மனதில் எவ்வளவாக பத்தினது உள்ளது.. இதைப் போன்றே கவர்ச்சியான முறையில் சிறந்த கருத்துடன் விழிப்புணர்வு செய்திகளைப் பகிர்ந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்....

By
Maheswari

Unknown said...

சன் டிவி யை ஒழித்தால் தான் தமிழ்நாடு உருப்படும்.
ராஜா, கனிமொழி வரிசையில் இந்த அண்ணன்-தம்பி ரெண்டு பேரையும் திகார்ல போடணும்.
எப்போது பார்த்தாலும்,சினிமா நடிகர் நடிகை செய்திகள்,இவர்கள் படங்களின் தற்புகழ்ச்சிகள்.. சகிக்க முடிவதில்லை. இவர்கள் வீட்டு செய்தி என்றால் அப்படியே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள்..
ரொம்ப ஆடினால் ஒரு நாளைக்கு வீழ்ச்சி வந்தே சேரும்..அம்மா மனது வைக்க வேண்டுகிறேன்

ஷர்புதீன் said...

//ரொம்ப ஆடினால் ஒரு நாளைக்கு வீழ்ச்சி வந்தே சேரும்..அம்மா மனது வைக்க வேண்டுகிறேன்//


athu sari., avanga mattum ennavaam!!

செல்வா said...

DTH ல இப்ப சன் டிவி வரதில்லை, அதனால சன் டிவி பார்த்தே எவ்ளோ நாள் ஆச்சு. ஆனாலும் அவுங்க நிகழ்ச்சிகள் எனக்கு பிடிச்சிருந்தது:-)

இவ்ளோ விசயங்கள் எனக்கு தெரியாது :-)

அருண் பிரசாத் said...

Good Post...But should have been much better...

Cable சங்கர் said...

நிறைய தகவல்கள் தவறானவை.. கொஞ்சம் விசாரித்துவிட்டு எழுதியிருக்கலாம். சன் டிவியின் ஆதிக்கம், எஸ்.சி.வி. பற்றிய செய்திகளில் இருக்கும் உண்மையை போல இன்னும் சில விஷயங்களில் தெளிவு இருந்திருக்கலாம். இல்லையேல் என்னை போன்றவர்களை தொடர்பு கொண்டு கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நன்றி.

பொற்க்கைவேந்தன் said...

முதலில் இக்கட்டுரையைப்பற்றிய என்னுடைய கருத்தை அழித்தமைக்காக "கழுகு"-க்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... ஒரு கட்டுரையை வெளியிடுவதற்க்குமுன் அதன் தரத்தை சுயபரிசோதனை செய்பவனே உண்மையான எழுத்தாளன் அல்லது படைப்பாளன்... அனால் இப்படி ஒரு அரைவேக்காடான கட்டுரையை வெளியிட்டுவிட்டு (அதற்கு "அதிரடி கட்டுரை" என்று தலைப்பு வேறு...), அதுகுறித்து நான் வெளியிட்ட கருத்தை அழித்து என் கருத்துரிமையை பறித்த கழுகு, நிஜத்தில் ஒரு காக்கைக்கு சமம்...

மலைக்கிறுக்கன் said...

நல்ல கட்டுரை.

நான் இலங்கையின் மலைநாட்டில் வசிக்கிறேன். இங்கு sun tv, kalaignar tv எல்லாவற்றையும் குப்பையில் போட்டு ரொம்ப நாளாகிறது. இங்கு அனைவரும் பார்ப்பது விஜய் டிவி மட்டுமே.

கழுகு said...

எமக்கு விமர்சனங்கள் ஏற்புடையவையே.. ! விமர்சனங்களுக்கு செவி சாய்க்கும் மாண்பென்ன என்று அறியாதவர் அல்லர் யாம்...

ஆனால் பொற்கை வேந்தனென்று பெயரிட்டு..நேற்றைக்கு உனது அடையாளம் உருவாக்கி இன்றைக்கு நீ வந்து கருத்து சொல்லும் எண்னத்திற்கு பின்னால் இருக்கும் உமது கயமையையும், நீவீர் யாரென்று யாம் அறிந்ததாலேயும் உமது கருத்துரையை நீக்கினோம்.

அடையாளம்ற்று வந்து கழுகினை காக்கை என்று சபித்த விசுவாமித்திரா...!!! நாம் உமது சல சலப்புகளுக்கு அஞ்ச மாட்டோம்...! உம்மையும் மரியாதையாகவே நடத்துவோம்.

அவையடக்கத்தோடு வரும் உமது கருத்துரைகளை வெளியிடுவோம் என்பதை உறுதி செய்கிறோம்..!

வாழ்த்துக்கள்!

கழுகு said...

கேபிள் சங்கர் @ ஏற்றுக்கொண்டோம் தோழமை.

எதிர் வரும் காலங்களில் இது போன்ற சறுக்கல்களை தவிர்க்கிறோம் தங்களிடம் விபரங்கள் கேட்டறிய அனுமதி கொடுத்தமைக்கு கழுகின் வந்தனங்கள்!

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்துவிட்டான்கள்.
இது பற்றிய தகவலறியவும்... இந்தக்கொடுமையை உலகறியச்செய்யவும் எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes