Friday, June 24, 2011

ஹலோ டாக்டர் உடலே...என் உடலே...(ஒரு ஆரோக்கிய பார்வை)சுவரில்லாமல் சித்திரம் எப்படி செய்ய முடியும்? உடலின் ஆரோக்கியம் போற்றாமல் ஆயிரம் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் போராட்ட வடிவங்களையும் மனிதர்களுக்கு பகிரதலின்  அர்த்தங்கள் இருக்க முடியாது. தான், தனது குடும்பம் என்று செப்பனிட்டு நாம் இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னால்...தன் உடல் நலம் என்ற சூட்சும இலக்கை கழுகு உற்று நோக்கச் சொல்கிறது.


உடல் ஆரோக்கியம் என்ற விசயம் பூர்த்தியான உடனேதான் ஒரு மனிதன் தன்னளவில் திருப்தியடைய முடியும். தன்னளவில் திருப்தியான மனிதனுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். தன்னம்பிக்கை அதிகமானால் செயல்களில் தீரம் வரும். செயல்களில் தீரமானால் வெற்றி என்பது எளிதாகும். வெற்றி பெற்ற மனிதன்...தான் மற்றும் தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலையை மனிதன் அடைந்து அவன் தன்னிறைவு ஆகும் போது யாரும் எதுவும் சொல்லாமலேயே வலியுறுத்தல்களின்றி...சமுதாய நலனை நோக்கி தானே வருவான் என்று கழுகு திண்ணமாக நம்புகிறது.


டாக்டர் ரோகிணி அவர்கள் கழுகின் இந்த விழிப்புணர்வு பயணத்தில் உடல் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்களை நம்மோடு பகிர இசைந்ததற்கு கழுகு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு .....உடல் ஆரோக்கியம் பகுதிக்குள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா!? பல்லு விளக்கினா மட்டும் போதுமா!?
இது பலருக்கும் வரும் ஐயம்,
பல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .
பல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்கப் படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது. ஒரு நாள் இல்லை, இரு நாட்கள் பல் கூச்சம் இருக்கலாம்,அது மிக இயல்பான விடயம். பல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும் போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைபடும்.  

வாய் இறுகு நோய் என்றால் என்ன? அதன் காரணிகள் எவை?

நோயின் தன்மை :

கன்னத்து உட்புறதசைகள்  அதன்  இலகு தன்மை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது  கடினமாகும் இந்நிலையே  வாய் இறுகு நோய்.


வாயின்  சதைகளில் ரத்தஓட்டம்  குறைந்து சதை வெளிறி காணப்படுதல் எரிச்சல்,வாய் உலர்ந்து போதல் , சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன்  அறிகுறிகள்.சில நேரங்களில் குரல் மாற்றம் , கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
பொதுவாக நான்கு விரற்கிடை திறக்கும் வாய்,இரண்டு விரற்கிடைக்கும்  குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்


காரணிகள் :


பொதுவாக பான்பராக் ,  பாக்கு  , புகையிலை , அதிகமான காரம்  பயன் படுத்துவோர் ,வைட்டமின் சத்து குறைபாடு  உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும்  வாய்ப்புகள் அதிகம்.


 பாக்கு , தம்பாக்கு, புகையிலை, அதிக காரம்  போன்றவற்றை தவிர்த்தல்,இரும்பு சத்து ,வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல் , அவ்வப்பொழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும் .டாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா?
ஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும் கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். சில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்.
மேற்கொண்டு தகவலுக்கு அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.


நோ அலட்சியம்:


இன்று தமிழ் இளைஞன் ஒருவன் வாய் திறக்க இயலவில்லை  என்று எங்கள் மருத்தவ பிரிவுக்கு வந்தான். ப்ளம்பிங் வேலை செய்யும் அவன்,வேலை முடிந்து ரூம்க்கு  திரும்பி அசதி மேலிட மேஜை மேல் இருந்த  தண்ணீர் பாட்டிலை வாயில் சரிக்க அதிர்ந்தான்.


அது பைப் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட். முழுதும் குடித்துவிடாமல் வெளியில் துப்பி விட்டான். அதானால் வாயில் மட்டுமே பாதிப்பு. வாய் முழுவதும் வெந்து காணவே மிக கொடுமை. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும்  நாக்கு,வாய்,உட்புறத்து கன்னச்சதைகள் அனைத்தும்  பாதிக்கப்பட்டு இருந்தது. நாக்கின் தசைகள் பாதிக்ப்பட்டு இறுகி விட்டது.


நாக்கின் அசையும் தன்மையும் ,உணர்வும்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இது மாதிரி கணங்களில் உயிர் பிழைத்து இருப்பது போல்  ஒரு நரக வேதனை இருக்க முடியாது.ஒரு மாதம் ஆகியும்  அவனால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை,பேச முடிய வில்லை ,ஏன் வாய் திறக்கக் கூட இயலவில்லை.


ஆகவே நண்பர்களே..  இனி இது போன்ற திரவங்கள், மேலும் உடம்புக்கு ஊறுசெய்யும் எதுவுமே உணவு பொருள் வைக்கும் மேஜை அல்லது அந்த குடிநீர் பாட்டில், உணவு பொருள் தாங்கி வந்த பழைய டப்பா  முதலியவைகளில் தயை கூர்ந்து வைக்காதீர் . நானே ஒரு முறை அதுபோல் பெயிண்ட் மிக்ஸ் செய்யும் தின்னரை  தண்ணீர் பாட்டிலில் வைக்க என் அன்னை அதை எடுத்து குடித்ததும்., எங்கள் கல்லூரியில் அட்டெண்டர் கவனக்குறைவாக  மேஜையில் ஸ்பிரிட் (எரிசாராயம் ) குடிநீர் பாட்டிலில் வைக்க., இருப்பது குடிநீர் என நம்பி சகமருத்துவர் ஒருவர் குடித்த  கதைகள் நடந்து உண்டு.


சில நேரங்களில் நம் கவனக்குறைவால் யாரோ இல்லை  நம் உயிரோ இல்லை உடம்போ பாதிக்க படக்கூடும். கவனம் ப்ளீஸ் .,,
கழுகிற்காக
ரோகிணி  சிவா(கழுகு இன்னும் உயரப் பறக்கும்..)

 

6 comments:

Anonymous said...

நன்றி டாக்டர் ரோகிணி சிவா.,

கழுகு தோழமைகளுக்கும் அதன் வாசகர் வட்டத்திற்கும் மிகவும் உபயோகமான கட்டுரையை நல்கியதற்கு மிக்க நன்றி.

பல் ஆரோக்கியம் சம்பந்தமாக அவ்வப்பொழுது (சிறிய அளவினதாக இருந்தாலும் சரி) இது போன்ற கட்டுரைகள் தந்து உதவுமாறு இந்த இடத்தில் எனது கோரிக்கையையும் தங்கள் முன் வைக்கின்றேன்.

Kousalya Raj said...

வாவ் கழுகில் 'ஹலோ டாக்டர்' !!

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மனிதனுக்கு முக்கிய விழிப்புணர்வு தனது ஆரோக்கியம் பற்றியதாக இருக்கவேண்டும்.

ரோகிணி சிவா அவர்களின் பதிவு மிக உபயோகமான ஒன்று. அவர்களுக்கு என் நன்றிகள்.

//இது மாதிரி கணங்களில் உயிர் பிழைத்து இருப்பது போல் ஒரு நரக வேதனை//

நீங்க எழுதி இருப்பதை படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

பல் பற்றி எனக்கும் நிறைய கேள்விகள் உண்டு. இங்கே படித்து தெரிந்து கொண்டேன்...

கழுகு தன் சிறகை இன்னும் அதிகமாக விரித்து அழகாக/நிலையாக பறப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும்.

என்றும் என் வாழ்த்துக்கள் கழுகுக்கு !

sathishsangkavi.blogspot.com said...

டாக்டரம்மா மிக்க நன்றி...

இனி நிறைய கேள்விகள் குவியும் பாருங்க...

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புண்ர்வுப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் உபயோகமான கட்டுரையை நல்கியதற்கு மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் கழுகு, பயனுள்ள அரிய தகவல்கள் அடங்கிய கருத்துரையாடல். இதில ரோகினி சிவாவினைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கொடுத்திருக்கலாம். அவ்வறிமுகம் உரையாடலின் சிறப்பினை இன்னும் உயர்த்தி இருக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes