Thursday, June 16, 2011

பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும் (16.6.2011)பஞ்ச் 1

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு முதல்வருக்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். 15 வருசத்திற்கு  முன்னால தமிழ் நாட்ல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா...  தமிழகத்தை ஆண்டவனாலயும் காப்பத்த முடியாதுன்னு சொன்ன அதே ரஜினி இன்னிக்கு அம்மையார் ஆட்சிக்கு வந்ததால தமிழகத்தை ஆண்டவன் காப்பாத்திட்டார்னு சொல்லியிருக்கார். 

இதே நேரம் கலைஞர் கருணாநிதியோடும் சகஜமான ஒரு தொடர்பிலும் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். நிம்மதியா வாழணும்னா எல்லோரையும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் வாழணும் அப்டீங்கிற சூத்திரத்தை சொல்லாம சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தை காப்பாத்தினது எல்லாம் பொறவு சார்.. உங்களை காப்பாத்திய ஆண்டவனுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க..! சீக்கிரம் வாங்க!
பஞ்ச் 2
புதிய அரசு பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே இயங்கலாம்னு கோர்ட்டு தீர்ப்பு சொல்லிடுச்சு மேலும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளை கட்டுப்படுத்த முடியாதுன்னும் சொல்லியிருக்கு...! சரி ரைட்டு  இப்ப ரெண்டு கேள்வி எழுது மனசுல...

1) இது தமிழக அரசின் கொள்கை முடிவா? இல்லை அ.தி.மு.க என்னும் கட்சியின் கொள்கை முடிவா?

2) நிஜமாவே புது கோட்டை ரெடியாயிருக்கா இல்லையான்னு ஏன் நீதி மன்றம் ஒரு குழுவை அமைச்சு செக் பண்ணிட்டு தீர்ப்பு சொல்லக்கூடாது...(ஓ.. குழு செக் பண்ணி சொல்றதுக்குள்ள 5 வருசம் முடிஞ்சுடும்னு சொல்றீங்களா...சரி விட்டுத்தள்ளுங்க பாஸ்...!!!)பஞ்ச் 3
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல எனக்கு எந்த தொடர்பும் இல்லைனு மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ரொமப நேர்மையா சொல்லியிருக்காங்க..! அதை எல்லாம் யாரு சார் கேட்டா... விட்டுத்தள்ளுங்க....முதல்ல நீங்க பாராளுமன்றத் தேர்தல்ல ஜெயிக்கவே இல்லனு பேசிக்கிறாங்களே..அதைப் பத்தி கொஞ்சம் விளக்குறீங்களா?ன்னு தான் கேக்க மனசு துடிக்குது.

அநியாயத்துக்கு  நல்லவன் வேசம் போட்டுகிட்டு எப்டி சார் காங்கிரஸ் கட்சில இருக்கீங்க...? சார் தமிழ் நாடு இல்ல.. வெளிநாடு போல...!
பஞ்ச் 4
சானல் 4 வெளியிட்டு இருக்கிற வீடியோக்களை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது உலக சமுதாயம். இது சம்பந்தமான வீடியோக்களை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பரப்ப வேண்டும். இயன்ற வரை எல்லோருக்கும் போய் ரீச் ஆகணும். ரீச் ஆகறதோட மட்டும் இல்லாம, காங்கிரஸ் கட்சியின் கைகள் இந்தியாவின் பேரைச் சொல்லி எவ்ளோ அட்டூழியம் பண்ணியிருக்குன்னும் சொல்லணும்.

நியாயம் பேசுற இந்திய தேசத்து அரசியல்வாதிகளும், பொது நல விரும்பிகளும் இதை எல்லாம் பாத்துட்டு என்ன பண்ண  போறாங்க?  வட நாட்ல இருக்குற் மீடியாஸ் எல்லாம் இந்தியாவைச் சேர்ந்த மீடியாஸ் தானா? இல்லை ஒன்லி ஃபார் வட இந்தியாவுக்கா?

அடச்சே....என்ன சொல்லிட்டு இருக்கேன்....நீங்க இடையில தமிழக தனியார் தொலைக்காட்சிகள் பத்தி கேக்குறீங்க........?????இவனுக எல்லாம் டி.வி வச்சு இருக்கறது தங்கள் கட்சிகளை வளர்க்க சார்....உண்மையை சொல்ல கிடையாது...! ப்ளீஸ்...ஸ்கிப் திஸ் புல்லுருவிகள் பாஸ்!பஞ்ச் 5
இந்த சமச்சீர் கல்வி திட்டத்துல என்ன பிரச்சினை?  இதுக்கு பின்னால் என்ன அரசியல் இருக்குன்னு எல்லாம் நம்ம மாதிரி சாதாரண மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனா என்ன புண்ணாக்கு இருந்தாலும் எங்க வீட்டு பிள்ளைகள் படிப்புலயா ராசா இந்த விளையாட்டை எல்லாம் அரசியல்வாதிங்க எல்லாம் நடத்தனும்.

கல்விக்கும் அதை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் அரசியல்வாதிகள் இல்லாத ஒரு தனி அமைப்பு தேர்தல் ஆணையம் மாதிரி வைக்க முடியாதுங்களா? பள்ளிக்கூடம் தொறந்தும் என்ன பாடத்திட்டம்னு தெரியாம இருக்குற புள்ளைகள பாத்தா பாவமா தெரியலையா சாமி?

ஸ்ட்ரெய்ட்டா நாட்டோட எதிர்காலங்கள் மேல சுடு தண்ணி ஊத்துறீங்களே.... என்ன நியாயம் இது?


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

5 comments:

Anonymous said...

////வட நாட்ல இருக்குற் மீடியாஸ் எல்லாம் இந்தியாவைச் சேர்ந்த மீடியாஸ் தானா? இல்லை ஒன்லி ஃபார் வட இந்தியாவுக்கா?/// எல்லாம் சுய லாபத்துக்கு பாஸ் ...

Rajan said...

இந்த கேள்விகள் எல்லாம் உறைக்கிற மாதிரி இருந்த நாடு எப்பவோ முன்னேறி இருக்கும் பாஸ்.

பாலா said...

பஞ்சாமிர்தம் அருமை. நாளாவது பஞ்ச் பத்திக்கிட்டு வருது...

அருண் பிரசாத் said...

ரஜினி ரெட்டைவேஷம் போடுறார்னு எல்லோரும் சொல்லிடு இருக்கறப்பா... அவர் சார்ப்பா எழுதி இருக்கறது பாராட்டதக்கது....

ரஜினி மட்டுமா ரெட்டைவேஷம் போடுறார்.... நாம கூட தான் 2001ல ஜெ வை ஜெயிக்க வெச்சோம், 2006 ல முக வை ஜெயிக்க வெச்சோம்... இப்போ மறுபடி ஜெ... நாம ரெட்டைவேஷம் போடலியா?

அருண் பிரசாத் said...

இந்த வட இந்திய மீடியாக்கள்... தென் இந்தியானு ஒரு பக்கம் இருக்கற்தே மறந்துட்டாங்க.... அவனுங்களுக்கு 100% கட் ஆப், பெண் கற்பழித்து கொல்லப்பட்டாலா, வெறும் கொலையா இதுல தான் ஆராய்ச்சி நடட்த்திட்டு ஒருக்காங்க....

ஒரே ஆறுதல் நம்ம ராசாவை தொடர்ந்து காட்டுறதுதான்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes