Thursday, July 21, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (21.7.2011)



பஞ்ச்: 1

மிகப்பெரிய மாற்றம் வந்து விட்டது  போல தமிழகத்திற்கு புதிய ஆட்சியை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் முன்னால் தான் என்றென்றும் தனது தனித்தன்மையை விட்டு விடப்போவது இல்லை என்று தனது படை பரிவாரங்களை எல்லாம், கடந்த ஆட்சியாளர்கள் மீது ஏவி விட்டுக் கொண்டிருப்பதைக் கூட விடுங்கள்....


சமச்சீர் கல்விக்கு நீதிமன்றம் தீர்ப்பினை கொடுத்த பின்பும், மீண்டும் மேல் முறையீடு செய்வோம் என்று கொக்கரித்துக் கொண்டு செல்வது எல்லாம் யாரின் நலனுக்காக? மக்கள் நலனுக்காகவா? அல்லது கருணாநிதிக்கு எதிராகவா? பிள்ளைகள் கல்வி கற்கும் விசயத்தில் அரசியல் நடத்தும் வழிமுறைகள் எல்லாம் என்று மாறுமோ? தேர்தல் கமிசன் போல கல்வி விசயங்களுக்கும் தன்னிச்சை அதிகாரங்கள் கொண்ட துறை உருவாக்கப்பட்டால் தேசத்தின் எதிர்காலம் சீரழியாமல் காப்பாற்றப்படும்.

பஞ்ச்: 2 

உப்பை தின்னுட்டீங்க கருணாநிதி வாள்  தண்ணி குடுச்சுகிட்டு இருக்கீங்க. ஏற்கனவே குரங்கு, இதுல பைத்தியம் வேற பிடிச்சு அதுக்கப்புறம் ரெண்டு படி மிளகாய் பொடிய தூக்கி தலையில கொட்டுனா என்ன ஆகும் தாங்க முடியுமா ஆட்டத்த....! அனுபவிச்சுதான் ஆகணும்...

வயித்தெரிச்சல் சார். மனிசனோட வயித்தெரிச்சல். அரசன் அன்று கொல்வான் தெய்வன் நின்று கொல்லும் அப்டீன்றது எல்லாம் பழமொழி. அரசனாய் இருந்தாலும் ஆண்டியாய் இருந்தாலும் சத்தியம் ஏதோ ஒரு வடிவத்துல வந்து நீதி வழங்கிகிட்டு இருக்கு..அதுவும் டக்கு டக்குனு...! உங்கள் அரசியல் வாழ்க்கை எப்போதும் எல்லோருக்குமே ஒரு பாடம்தான் போங்க!

பஞ்ச்: 3

சீமான் சார். ஈழ அரசியல் எல்லாம் சரிங்க சார். தமிழ்நாட்டு அரசியல் பத்தி கொஞ்சம் கூட கவலையில்லையா உங்களுக்கு. தமிழ் நாட்டில் இருக்கும் வாழ்வாதரப் பிரச்சினைகளை எல்லாம் தூக்கி பள்ளிக்கரனைக் குப்பைத்தொட்டியில வீசிப்புட்டு என்னமோ தமிழ்நாட்டு சனம் எல்லாம் சுபிட்சமா இருக்குற மாதிரி அரசியல் பண்ணாதீங்க.

ஈழத்தைப் பத்தி பேசவேண்டாம்னு சொல்லல எசமான். ஈழத்தைப் பத்தி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காதிங்கன்னுதான் சொல்றோம். ஒருவேளை அதை விட்டா உங்களுக்கு ஒண்ணும் தெரியாதோ..?

ஒரு கொசுறு கேள்வி: ஏன் சார்...? அம்புட்டு கண்ணீ ரு விடுதே விசயலட்சுமிப்பொண்ணு நெசமா சார்?

பஞ்ச்: 4

இனிக்கும் கற்கண்டு செய்தி ஒண்ணு சொல்றேன் எடுத்துக்கோங்க....! மின்சாரக் கட்டணமும் ஏறப்போகுதாம் சந்தோசமா கொண்டாடுங்க ஜனங்களே. கொடுக்கறதே அரைக் கரண்ட் இதுல ஏறுனா என்ன? ஏறாட்டி என்னனு இதையும் பாசிட்டிவா எடுத்துகிட்டு இருட்டுல  மெழுகுதிரி வைச்சுகிட்டு ஹேப்பி இன்று முதல் ஹேப்பினு பாட்டுப் பாடிக் கொண்டாடுங்க! 

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி வடிச்சு உப்பை போட்டு (உப்பு விலை எம்புட்டுனு தெரியல) தின்னுபுட்டு, டி.வி, டெக், மிக்ஸி வாசிங்க் மெசின் லேப்டாப் எல்லாம் பக்கதுல வச்சிகிட்டு ஒரு கிலோ வெங்காயம் தக்காளி வாங்க முடியாம வானத்தைப் பாத்துகிட்டே இருப்போம், வைகுந்தம் போயிடுவோம்.

மக்களுக்குத் தேவையில்லாத ஆடம்பர இலவசங்களை கொடுத்து தேவையில்லாமல் செலவு செய்த கடந்த அரசு சரி, தற்போது அந்த திட்டங்களையே டெக்கரேட் பண்ணிக் கொடுக்கும் அதிமுக அரசும் சரி...கடைசியில வைக்கிற உலை மக்கள் தலையிலதான். இது புரியாம என் சனம் ஆதரிச்சும் எதிர்த்தும் சண்டை போட்டுகிட்டு இருக்கு. வெளங்கிடும் மக்கா!

பஞ்ச்: 5

இந்த பொதுக் குழு கூட்டத்துலயாச்சும் ஸ்டாலின தி.மு.க தலைவரா அறிவிக்க மாட்டாங்களான்னு கட்சிக்காரங்கள்ளயே நடுநிலைமையானவர்களும் ,ஸ்டாலின் ஆதரவாளர்களும் வாயைப் பிளந்துகிட்டு  எதிர்பார்க்கிறாங்களாம். சரியான ஒரு வழிமுறையாத்தான் அது இருக்கும்னு பொதுமக்களுக்கும்  தெரிஞ்சாலும், ஐயா அப்டி ஒரு முடிவு எடுக்காமாட்டார்னு ஐயாவுக்கு நெருங்கிய பெரியவங்க சொல்றாங்களாம்...

காரணம், ஸ்டாலின தலைவரா எடுத்துட்டா ஐயா கண்ணு முன்னாலேயே அழகிரியும் ஸ்டாலினும் அடிச்சிகிட்டு கட்சி சிதறிப் போயிடும்னு ஒரு பயம் இருக்காம் ஐயாவுக்கு. காலமெல்லாம் குடும்பநலத்துக்காக கட்சிய அசைச்சு அசைச்சு இழுத்து எங்கயோ கொண்டு போய்ட்ட ஐயா இப்பவும்  தன் குடும்பம் தன் கண் முன்னாடியே பிரிஞ்சு போயிடக் கூடாது அப்டீன்ற ஒரே காரணத்துக்காக தலைமைப் பொறுப்பை விடாமா பிடிச்சிகிட்டு இருகாராம். மத்தபடி ஐயாவுக்கு தலைமை பொறுப்பு மேல எல்லாம் ஆசை ஒண்ணும் கிடையாதா.

நல்ல பாலிஸிங்க ஐயா...கட்சி..வளர்ந்துடும்...!!!!

கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)






4 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கட்டணமும் ஏறப்போகுதாம் சந்தோசமா கொண்டாடுங்க ஜனங்களே//

நேற்றைய பேப்பர் பாருங்க. மின்சாரக் கட்டணம் இப்பதைக்கு ஏத்த மாட்டோம்னு EB ல சொல்லிருக்கங்க..

கழுகு said...

ரமேஷ் @ அப்படியா - செய்திக்கு நன்றி!

இப்போதைக்கு ஏத்தமாட்டேன்னு மறுபடியும் சொல்லிட்டாங்களா...அப்ப சரி.. இடைக்காலத்துக்கு சந்தோசப்பட்டுக்கோங்க மக்களே..!

இராஜராஜேஸ்வரி said...

பஞ்ச் அமிர்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பாலா said...

இப்போ அம்மாவோட கவலை என்னான்னா, கல்விக்கண் திறந்த காமராசர் என்று சொல்வது போல, சமச்சீர் கல்வி தந்த கலைஞர் என்று சரித்திரம் எழுதி விடுவார்களே என்று. இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து வருபவர்கள், கலைஞர் என்று ஒரு மகான் இருந்தார் போலும் என்று நினைத்து விடுவார்களே?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes