Thursday, June 09, 2011

பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும். (09.6.2011)

பஞ்ச் 1
=======

ஈழப்பிரச்சினையில் கருணாநிதி நாடகமாடியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தானே.....? இதைப்போய் மாண்புமிகு முதல்வர் ஒரு கருத்து எடுத்து தமிழ்நாட்டு ஜனங்களுக்க் சொல்லி நல்ல பேரு எடுத்துக்க வேண்டியது இல்லை. நீங்க என்ன செய்யப் போறீங்கனு நாங்களும் பாக்கத்தானே போறோம். சென்ட்ரல் கவர்மெண்டுக்கு ஆப்பு வைப்பீகளா இல்லை பாராளுமன்ற தேர்தல்ல கை கோப்பீகளான்னு....! எப்படி பாத்தாலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கீங்க....அது வரவேற்கப் படவேண்டியதுதான்.

இதுக்கு இடையில் முதல்வர் மேல இருக்குற சொத்து குவிப்பு வழக்கு வேற வர்ற 15 ஆம் தேதி க்கு வருதாம்...! பாத்து முடிச்சு உடுங்க அம்மா...!

பஞ்ச் 2
=======

ப.சிதம்பரம் ஐயா பண்ற காமெடி அநியாயத்துக்கு போய்கிட்டு இருக்கு. ராம் தேவ் ஆயுதம் ஏந்துவேன்னு சொன்ன உடனே சாமியாரோட சாயம் வெளுத்துப் போய்ட்டதா  உடனே ஒரு அறிக்கை...! ஏனுங்க அண்ணாச்சி....நாட்டுக்குள்ள ஆயுதத்தோட வந்து கொள்ளை உசுருகள கொன்ன தீவிரவாதிக ஊசுர காப்பாத்த எம்புட்டுங்க சாமி செலவழிக்கிறீக மாசத்துக்கு....!


சாமியாரு கெட்டவருன்னே வச்சுக்கிடுவோம்.. நீங்க நல்லவகளா? உங்க சாயம் தமிழ்நாட்ல வெளுத்துப் போயி துணியே இல்லாம நிக்கிறீயளே...உம்ம உடம்புகள பாரும்!

பஞ்ச் 3
======

ஒவ்வொரு காலத்துலயும் ஒண்ணு ஒண்ணுதான் செய்ய முடியும். ரஜினி சார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. எப்டி எப்டி எல்லாமோ நடிச்சீங்க. ரசிச்சோம். வயசு ஆச்சுன்றது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். நடிக்க வேணாம்னு சொல்லல உங்க வயசுக்கு ஏத்த கேரக்டர் ரோலா பத்து செய்ங்க சார் இனிமேயாச்சும். நடிக்கிறத விட நீங்க உயிரோட இருக்குறது முக்கியம் இல்லீங்களா...! நல்லபடியா பொழச்சு எந்திருச்சு வாங்க மகராசான்னு வேண்டிக்கிறோம்.

பஞ்ச் 4
======

பள்ளிக்கட்டணம் முறைகேடா வசூலிச்சா நடவடிக்கை எடுப்போம்னு  அரசு அறிவிச்சு இருக்கு. இதை ஒழுங்க நடைமுறை படுத்தி கன்னா பின்னானு வசூல் செய்யும் வசூல் ராஜாக்களை கண்ட்ரோல் பண்றது மட்டும்  வேலை இல்லிங்க.. அப்டி வசூல் பண்றவங்கள கண்டுக்காம விடுறதுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிங்கா மேலயும் நடவடிக்கை எடுக்கணும். மொத்தமா எல்லாம் ஒழுங்கு மேனிக்கு நடந்த எங்க புள்ள குட்டிய பொழச்சுப் போகும் சாமியோவ்...!

பஞ்ச் 5
=======

தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டன் அனுமதி கொடுத்து இருக்கு தடை கிடையாதுன்னு...ஆனா ஏழு கோடி பேரு இருக்குற தமிழ் நாட்ல....ஊர்ல இருக்குற தமிழனுக்கு எல்லாம் தாய்த்தமிழனா இருக்குற நாம கொடிய உபயோகிக்க முடியாது. தனித்தமிழ் ஈழம் பற்றி பேச முடியாது.. அப்டி இப்டின்னு சட்டம். இறையாண்மை ஸ்ட்ரெய்ட்டா வந்து நம்ம குரல்வளைய பிடிக்கும். ஒட்டு மொத்த மாநில கட்சிகளையும் அழிச்சுட்டு தான் மட்டும் இந்த தேசத்தின் ராஜாவ இருக்குற காங்கிரச இந்த இறையாணமை ஒண்ணியும் செய்யாது... ஏன்னா நாமதான் இளிச்சவாய்த்தனமா காங்கிரசுக்கு ஓட்டு போட்டுட்டு. .வானத்தை பாத்துகிட்டு நிக்கிறோமே...!

தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கொடுத்தவங்கதான் இந்திராகாந்தி அம்மையார் எல்லாம்... அவுங்களும் காங்கிரஸ்தானே?  இந்திரா காங்கிரசுக்கு இந்தியான்னா என்னனு தெரியும்..? சோனியா காங்கிரசுக்கு மாஃபியா வேலைதானே தெரியும்...! காலக் கிரகம்.



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



10 comments:

கூடல் பாலா said...

அத்தனையும் சூப்பர் பஞ்ச்.

Anonymous said...

ஆஹா...!!! அஞ்சு ஓட்டுப் போட ஏதாவது வாய்ப்பு இருக்கா?!

ஷர்புதீன் said...

அட போங்க சார்., வர வர அரசியல்ல்னாலே அலர்ஜியாகுது..

முனியாண்டி said...

///////
இதுக்கு இடையில் முதல்வர் மேல இருக்குற சொத்து குவிப்பு வழக்கு வேற வர்ற 15 ஆம் தேதி க்கு வருதாம்...! பாத்து முடிச்சு உடுங்க அம்மா...!////////

அதே மாதிரி ராசாவுக்கும் கனிமொழிக்கும் பாத்து முடிச்சு உட சொல்லுங்க.

முனியாண்டி said...

சாமியாரு கெட்டவருன்னே வச்சுக்கிடுவோம்.. நீங்க நல்லவகளா? உங்க சாயம் தமிழ்நாட்ல வெளுத்துப் போயி துணியே இல்லாம நிக்கிறீயளே...உம்ம உடம்புகள பாரும்!///

அப்போ ராம்தேவ் ஆயுதத்தோடு ஆள்களை கூட்டிட்டு போய் பிரச்சனை பண்ணும் வரைக்கும் சும்மா இருக்கனுமா? அவர் ஹோம் மினிஸ்டர் சார். சட்ட ஒழுங்கை பராமரிப்பது அவர் வேலை. தன்பக்கம் நியாயம் இருக்கின்றது என்பதற்காக ஆயுதம் ஏந்தலாமா? அப்படியென்றால் நக்சலைட்டுகளை பற்றி உங்கள் கருத்து என்ன?

முனியாண்டி said...

பள்ளிக்கட்டணம் முறைகேடா வசூலிச்சா நடவடிக்கை எடுப்போம்னு அரசு அறிவிச்சு இருக்கு. இதை ஒழுங்க நடைமுறை படுத்தி கன்னா பின்னானு வசூல் செய்யும் வசூல் ராஜாக்களை கண்ட்ரோல் பண்றது மட்டும் வேலை இல்லிங்க.. அப்டி வசூல் பண்றவங்கள கண்டுக்காம விடுறதுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிங்கா மேலயும் நடவடிக்கை எடுக்கணும். மொத்தமா எல்லாம் ஒழுங்கு மேனிக்கு நடந்த எங்க புள்ள குட்டிய பொழச்சுப் போகும் சாமியோவ்...!///

இந்த அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தே இயங்கிக் கொண்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கு தடை என்று அறிவித்ததும் தனியார் பள்ளி சங்கங்கள் அதை பாராட்டு தினசரிகளில் விளம்பரம் கொடுத்த வண்ணம் இருந்தார்கள். இவர்களா நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?

முனியாண்டி said...

தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டன் அனுமதி கொடுத்து இருக்கு தடை கிடையாதுன்னு...ஆனா ஏழு கோடி பேரு இருக்குற தமிழ் நாட்ல....ஊர்ல இருக்குற தமிழனுக்கு எல்லாம் தாய்த்தமிழனா இருக்குற நாம கொடிய உபயோகிக்க முடியாது. /////////


இது சரிதானா? தமிழீழக் கொடி இங்கே தடை செய்யப்பட்டுள்ளதா? இங்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவே அறிகிறேன். மற்றபடி இங்கு தனித்தமிழ் ஈழம் பற்றி பேச என்ன தடை உள்ளது? விளக்கமாக கூறமுடியுமா? தனித்தமிழ் ஈழம் என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய தேசியத்திற்கு எதிராகவும் தான் பேசுகிறார்கள். ஒரு நாடு இதை எல்லாம் அனுமதித்துக் கொண்டிருந்தால் எப்படி அது ஒரு நாடாக இயங்க முடியும்? இந்திய தேசியமே தவறு என்று மேடைகளில் பேசுவதை அரசு அனுமதிக்க வேண்டும் என கூற வருகிறீர்களா?

Nagarajan said...

அத்தனையும் சூப்பர்

Nagarajan said...

தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டன் அனுமதி கொடுத்து இருக்கு தடை கிடையாதுன்னு...ஆனா ஏழு கோடி பேரு இருக்குற தமிழ் நாட்ல....ஊர்ல இருக்குற தமிழனுக்கு எல்லாம் தாய்த்தமிழனா இருக்குற நாம கொடிய உபயோகிக்க முடியாது. தனித்தமிழ் ஈழம் பற்றி பேச முடியாது.. அப்டி இப்டின்னு சட்டம். இறையாண்மை ஸ்ட்ரெய்ட்டா வந்து நம்ம குரல்வளைய பிடிக்கும். ஒட்டு மொத்த மாநில கட்சிகளையும் அழிச்சுட்டு தான் மட்டும் இந்த தேசத்தின் ராஜாவ இருக்குற காங்கிரச இந்த இறையாணமை ஒண்ணியும் செய்யாது... ஏன்னா நாமதான் இளிச்சவாய்த்தனமா காங்கிரசுக்கு ஓட்டு போட்டுட்டு. .வானத்தை பாத்துகிட்டு நிக்கிறோமே...!

தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கொடுத்தவங்கதான் இந்திராகாந்தி அம்மையார் எல்லாம்... அவுங்களும் காங்கிரஸ்தானே? இந்திரா காங்கிரசுக்கு இந்தியான்னா என்னனு தெரியும்..? சோனியா காங்கிரசுக்கு மாஃபியா வேலைதானே தெரியும்...! காலக் கிரகம்.

"super....manusula patatha apdiye solreenga thalaiva.."

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முதல்வர் மேல இருக்குற சொத்து குவிப்பு வழக்கு வேற வர்ற 15 ஆம் தேதி க்கு வருதாம்.//
அட போங்கப்பா... நாங்க பாக்காத வழக்கா? அது எப்படியும் அடுத்த எலக்சன் வரைக்கும் இழுக்கும்...அதுக்குள்ள ஆட்சி மாறி அவங்க இவங்க மேல கேஸ் போடுவாங்க... மொத்ததுல நஷ்டபடபோறது மக்கள் வரிப்பணம் தான்... இதையும் மீறி எதுனா நல்லது நடந்தா ரெம்ப சந்தோஷம் தான்... பாப்போம்...

By the way, nice Punch'es..:)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes