Tuesday, June 07, 2011

கழுகு விவாதக் குழு - அறிவிப்பு!


மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் புரிதலின்மையும், தெளிவின்மையும், மேலும் முழுமையான பார்வையினையுமே எல்லா பிரச்சினைகளின் வேர்களாய் இருப்பதை கணித்து யாதொரு பாகமாயிருப்பினும் சரி அங்கே மக்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சேர்ப்பது என்ற தீர்மானம் கொண்டு கழுகு விழிப்புணர்வு கட்டுரைகளை ஈன்று வருகிறது.

கழுகின் சிறகு பலப்பட சமூக ஆர்வமும், பொது நல நோக்கும் கொண்ட நல்ல இதயங்களின் உதவி தேவை என்றெண்ணி நாம் தொடங்கிய கழுகு விவாத களம் என்னும் குழுமம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு நாமும் தோழமைகளை நமது உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டோம். ஆனால் கழுகு குழுமத்தின் செயல்பாட்டு விதிமுறைகளை வகுக்காது அதை பொதுவில் வைக்காது நண்பர்களை இணைத்துக் கொண்டதில் சில முரண்பாடுகள் வந்ததற்கு நாம் காரணமாகி விட்டோம்.

எமது எண்ணங்கள் செழுமையானவை, யாதொரு சித்தாந்தத்தையும் இறுக்கிப் பிடித்து நின்று கொண்டு அதை நிறுவ போராடாதவை, மேலும் எங்கெல்லாம் மனிதம் நசுக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் மனித வாழ்க்கைக்கு முரணாக நிகழ்வுகள் நிகழ்கிறதோ, எதுவெல்லாம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவுமோ அதன் பக்கம் நாம் எப்போதும் நின்று கொண்டு எமது குரல்களை உயர்த்துவோம் என்பதை எமது செயல்களின் வழமையில் அனைவரும் அறிந்ததே....!

கழுகு விவாதக் குழுவின் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு கழுகு செயற்குழு நண்பர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு இதோ இங்கே பொதுவில் வைக்கப்படுகிறது. கழுகின் விழிப்புணர்வு போரில் இணைய விரும்புவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை வாசித்து விட்டு இணையலாம். எமது கரங்களை வலுவாக்க வரவிருக்கும் தோழமைகளை வருக.. வருக.. என்று கழுகு இரு கரம் கொண்டு வரவேற்கிறது.



விதிமுறைகள்:

1) கழுகு குழும விவாதக் குழு நண்பர்கள் விவாதங்களின் போது வாதிட வேண்டிய அவசியமில்லையெனினும் தமது இருப்பினை உறுதி செய்தல் வேண்டும்


2) குழும நண்பர்களுக்கான நேரடி கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இணையத்திற்கு வர இயலாதவர்கள் எப்போது இணையம் வந்து கேள்விகளை பார்க்கிறார்களோ குறைந்த பட்சம் தங்களின் தாமதத்தைப் பதிவு செய்து பதிலளிக்க வேண்டும்.


3) விவாதக் குழுவில் இணைந்திருக்கும் நண்பர்கள் கழுகு கட்டுரைகளுக்கு திரட்டிகளில் வாக்களித்தல் கட்டாயமாக்கப்பட்டது. ஒரு வேளை கட்டுரையில் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமெனில் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் மாற்று கருத்தினை கண்டிப்பாய் குழுமத்தில் பதிய வேண்டும். அப்போதுதான் தவறான கருத்துக்கள் வலைப்பூவில் இடம் பெறலை தவிர்க்க முடியும்.


4) குழுமத்தை வலுவான கருத்துக்களே வழி நடத்தும் அதே நேரத்தில் குழும நியதிகளும், நெறிமுறைகளும் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டு குழும உறுப்பினர்களின் முன் விவாதத்திற்கு வைக்கப்படும்.


5) குழுமத்தின் செயல்பாடுகளில் முரண் கருத்துகள் இருப்பவர்கள் தாராளமாய் கருத்து தெரிவிக்கலாம். ஏன் முரண்படுகிறார்கள் என்பதையும் அதற்கு தீர்வினையும் சேர்த்தே பகிர வேண்டும். தீர்வுகளும் விவாதத்திற்குரியவையே.


6) குழும செயல்பாடுகள் சீராக இருக்கவே பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன மேலும் அது மற்ற தோழமைகளின் மீது தமது ஆளுமையைச் செலுத்த அல்ல என்பதை உணரல் அவசியமாகிறது.


7) ஒவ்வொரு குழும உறுப்பினர்களும் ஏதோ ஒரு வகையில் கழுகு வலைப்பூ வளர்ச்சிக்கு உதவுதல் அத்தியாவசியமாகிறது....

விவாதத்தில் ஈடுபடவில்லையெனினும் நல்ல கட்டுரைகளை அடையாளம் காட்டல், சம்பந்தப் பட்ட கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெறல் போன்றவற்றை செய்தல் நலம்.


8) கழுகு மீட்டிங் ரூமில் இணைய விரும்புவர்கள் தங்களது ஒப்புதலை அறிவித்த பின்னே அங்கே அனுமதிக்கபடுவர்.


9) கழுகு மீட்டிங் ரூம் உறுப்பினர் சந்திப்பினில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டது. வர இயலாதவர்கள் முன் கூட்டியே மின்னஞ்சல் மூலம் அறிவிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். தொடர்ச்சியாக நான்கு சந்திப்புகளுக்கு வர இயலாதவர்கள் தகுந்த காரணத்தை கூறுவதன் மூலம் மீண்டும் இணைக்கப்படுவார்கள்.


10) கழுகு வலைப்பூவும் குழுமமும் பொது நல நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதலால் விதிமுறைகளை பேணுவது அத்தியவசியமாகிறது.


மேற்கொண்ட விதிமுறைகளை ஏற்று கொள்பர்கள் கழுகு உறுப்பினர் ஆகலாம்.

கழுகு விவாதக் குழுவில் இணைய கீழ்க்கண்ட சுட்டியை அழுத்தவும்


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விசயம்...

வாழ்த்துக்கள்...

ஷர்புதீன் said...

:)

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes