Monday, June 27, 2011

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது ஏதெனும் நல்லது நடக்கும் என்ற நமது ஆசைகளில் டன் டன்னாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. கடந்து போன ஆட்சியின் ஒரு வலுவான கிடுக்குப் பிடியிலிருந்து தப்பித்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே காழ்புணர்ச்சி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் நலம் பயப்பதாய் இருந்தாலும் கூட அதை தவிடு பொடியாக்கித்தான் தீருவேன் எனபதற்கா அரசுப் பொறுப்பு ஏற்றார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசு கடந்த அரசு செய்த நல்ல விசயங்களை அழித்தொழிக்கத்தான் வேண்டுமா...?

சாரசரி தமிழனின் ஆதங்கமாய் விரியும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...!


உலகளாவிய தமிழர்கள் அனைவரின் கோபத்தின் விளைவாக தமிழகத்தின் முதல்வர் என்னும் சிம்மாசனத்தில் இருந்து அல்லாடும் வயதில் தூக்கி எறியப்பட்டார் கருணாநிதி. தூக்கி எறியப்பட்டவரை துச்சம் என எண்ணி இப்போது சிறப்பான ஒருவரை உட்கார வைத்துவிட்டதாய் உண்மையறியா நடுத்தர மக்கள் மே-13 முதல் அந்த சூடு ஆறும் வரை பிதற்றிக்கொண்டு தான் இருந்தனர். இதில் திமுக.,சார்பு மக்களும்- ஜெ.,வை பற்றி விடயம் தெரிந்தவர்களும் அடக்கிவாசித்தனர்.

உண்மையில் இம்முறை ஆட்சி பொறுப்பேற்ற போது ஜெ., மாறிவிட்டார் போலும் என்னும் எண்ணம் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணமே அவரின் செய்கைகள் இருந்தன.

ஆனால், பதவி ஏற்று ஒரு மாத காலம் கூட முடியாத நிலையில் பல மாற்றங்களை கொண்டு வந்து ‘‘நான் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இல்லை.. எனது எதிரி கருணாநிதியை பழிவாங்கும் நோக்கில் தான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.


சான்றோர் வாக்கின் படி நல்லது செய்யாவிடிலும் கெட்டதாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா.!? அவர் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் காப்பீடு திட்டத்தை பொது காப்பீடு திட்டமாக்குவதும், கலைஞர் கருணாநிதி நகரை மீண்டும் கேகே நகர் என மாற்றுவதும் மிகவும் மக்களுக்கு தேவையான ஒன்றா.!?

இதை பற்றி விடுவோம். சமச்சீர் கல்வி என்ன பாவம் செய்தது.!? அது என்ன கலைஞரின் அதிரிபுதிரி மூளைக்கு தோன்றி அவரே கொண்டு வந்த திட்டமா.!? ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் பல நாள் ஏக்கம் அல்லவா,!?
 
மெட்ரிக்குலேஷனில் படித்த ஒரு ஐந்தாம் வகுப்பு பையன் ஆறாவது அரசு பள்ளிகூடத்துல சேர்ந்தா அவன் மூன்றாம் வகுப்பில் படித்தது தான் அங்கு  இருக்கும். இது தான் சமநிலை கல்வியா.!? இதை தான் நாம் விரும்புகிறோமா.!? என்ற பல நாள் கேள்விக்கு விடையாக தான் அது இருந்தது.

நிதி பணத்தில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தாலும் அரசியல்வாதிகள் அந்த நிழற்குடையோடு பெரிதாய் தம் பெயரை பொதித்து வைப்பது வழக்கம் தானே.! அதில் கொஞ்சம் மிகைப்பட்டவர் கருணாநிதி. தம்மை பற்றிய எழுத்துக்களும், தம் எழுத்துக்களையும் மக்கள் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அதை அவரது ஆட்சிகாலத்தில் கொண்டுவர போகும் சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதிக்க நினைத்தார். இதில் தவறு என்ன இருக்கு.!? நல்ல கருத்தாக இருந்தால் யார் சொன்னால் என்ன.!?

வழமையாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பள்ளியை 15ம் தேதி திறக்க சொல்லி சொன்னது புது ஜெ., அரசு. திறந்த பள்ளிகள் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று புரியாமல்.!! ஜூலை 5க்கு பிறகாவது இதற்கு ஒரு சிறப்பான முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாக தலைவிரித்து ஆடுகிறது.


சமச்சீர் கல்வி நிறுத்தத்திற்கு காரணம் என்று சொல்லப்படுவது சரியான கல்வித்தரம் இல்லை என்பதே.! இதே தரத்தில் தான் அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை படித்துக்கொண்டிருந்தனர். இப்போதைய அரசு பொதுவாக மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா, இல்லை மெட்ரிக்குலேஷன் மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா.!?

கல்வி தரத்தினை குறை சொல்லும் அரசு. கல்வி வழங்கும் இடத்தின் திறனை நன்கு பராமரிக்கிறதா.!? எத்தனை அரசு பள்ளிகள் சுற்று சுவர், மின்விசிறி, கரும்பலகை கூட இல்லாமல் இருக்கின்றன. தரத்தினை உயர்த்த நினைப்பவர் முதலில் அதில் கவனம் செலுத்தலாமே.! கல்வி ஆண்டு தொடங்கும் முன்னர் இவ்வாறான குழப்பாவதியான செயல்பாடு மாணவர்களை குழப்பம் அடைய செய்யாதா.!? இந்த கல்வி ஆண்டு இறுதியில் பொலம்பல்களும், குழப்பங்களும் மட்டும் தான் நீடிக்குமா.!? பொறுமை தான் வேண்டும். 

பொறுப்பது தான் நமக்கு புதிதில்லையே.!!
மானமிழந்த சோற்றை வீசி
மதியானாய் மாற்றான் தேடினோம்
வெண்கதிரோனாய் ஒருத்தி
உதித்த கொப்புளத்தில் தெரிந்தது
விடியலில்லை.! விந்தையானோம் என்று.!!



கழுகிற்காக







(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



20 comments:

ரேவா said...

முதலில், மற்றவர்களில் இருந்து மாறுபட்டு, சமூக பார்வை கொண்டு இயங்கிவரும்,கழுகுகிற்கும்,கழுகின் பதிவுகளுக்கும் , கழுகில் அங்கம் வகிக்கும் ஏனைய பதிவருக்கும் என் வாழ்த்துக்கள்...அதோடு இன்றைய பதிவை சிறப்பாய் பதிந்த தம்பி கூர்மதியனுக்கும் என் வாழ்த்துக்கள்....

Unknown said...

நிச்சயமாக இனி எந்த ஆட்சியும் 100% சரியாக அமைவதற்கு வாய்ப்பில்லை. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் எழுதிய அம்மா ஆட்சியின் விளைவு குறித்த பதிவு: http://tamil121.blogspot.com/2011/05/blog-post_15.html

ரேவா said...

‘‘நான் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இல்லை.. எனது எதிரி கருணாநிதியை பழிவாங்கும் நோக்கில் தான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.

உண்மைதான், இது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தவறாமல் நிகழ்கின்ற ஒன்று தான்...ஆனாலும் பழைய திமுக ஆட்சியில், சுரண்டல்கள் போக, மக்களுக்கான பல நல்லத் திட்டங்கள் கிடைத்தது...இன்று ஆட்சி பொறுப் பேற்ற அம்மா.... சட்ட சபையிலிருந்து, சமச்சீர்க் கல்வி வரை, அரசுடைமைக்கும், மக்களுக்கும் , நல்லது செய்யும் நோக்கில் செயல்படாமல், தான் சொந்த விருப்பின் பெயரிலே செயல் படுகிறார் என்பது யாவரும் அறிந்ததே... ஆனாலும் பெரிதும் பதிக்கப் படுவது பள்ளிக் குழந்தைகளே...அரசுக்கு ஒரு போதும் மக்களின் மேல் அக்கறை இல்லை என்பதை விட, விட்டுப் போன அரசின் திட்டங்களை தவிர்க்கும் நோக்கிலே, அமையும் அரசு செயல்படுகிறது....இனி எப்பொதும் இவர்கள் ஆட்சி இப்படித் தான்...

ரேவா said...

கல்வி தரத்தினை குறை சொல்லும் அரசு. கல்வி வழங்கும் இடத்தின் திறனை நன்கு பராமரிக்கிறதா.!? எத்தனை அரசு பள்ளிகள் சுற்று சுவர், மின்விசிறி, கரும்பலகை கூட இல்லாமல் இருக்கின்றன. தரத்தினை உயர்த்த நினைப்பவர் முதலில் அதில் கவனம் செலுத்தலாமே.!

அட போங்க சார்..இந்த அரசுக்கு, பாடத் திட்டத்துல வந்த மூத்த அரசியல் பெரியவரின் எழுத்துக்களை, பற்றிய குறிப்பு இருக்கும் பகுதியை கிழிக்கவே நேரம் சரியா இருக்கும்...இதுல அரசு பள்ளிகளைப் பற்றி யாரு கவலை பட...

ரேவா said...

சகோதரர் கூர் மதியனுக்கு வாழ்த்துக்கள்...இது போன்ற பல சமூகப் பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்..இன்றே கழுகில் எனது முழுமையான வருகை..வாழ்த்துக்கள் கழுகில் இயங்கும் அத்துணை சகோதரருக்கும்....

கவி அழகன் said...

நச்சென்று ஒரு சாட்டையடிப் பதிவு உண்மை முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு ஒரு சல்யூட்...

Anonymous said...

நல்ல பகிர்வு, தம்பி கூர்மதியன்.

//இதே தரத்தில் தான் அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை படித்துக்கொண்டிருந்தனர்//

சமச்சீர் கல்வியின் தரமும், பழைய அரசு பாடத்திட்டத்தின் தரமும் நிச்சயமாக ஒன்று அல்ல.

இது பழைய பாடத்திட்டத்திற்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கும் நடுவில் உள்ள ஒரு நிலையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளது. இன்னும் 5 வருடங்களில் தொடங்கி 10 வருடத்திற்குள் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு சிபிஎஸஇ க்கு இணையானதாக மாற்றப்படும். இது தான் திட்டம்.

மெட்ரிகுலேஷன் என்பது பைபாஸில் சென்று கொண்டிருக்கும் ஒரு பாடத்திட்டம். செயல்வழி கல்வியோ, புரிந்து கொண்டு தேர்வெழுதும் வழிமுறையோ இல்லாமல் மாணவர்கள் வாயில் கரைத்து ஊற்றி தேர்வில் வாந்தி எடுக்க வைக்கும் ஒரு அணுகுமுறை அவ்வளவே.

அதனால் சமச்சீர் கல்வியோடு மெட்ரிகுலேஷனை கம்பேர் பண்ணவே கூடாது. இதன் நோக்கம் சிபிஎஸ்இ தரத்திற்கு இன்னும் பத்து ஆண்டுகளில் அனைத்து மாணவர்களையும் கொண்டு செல்வதே ஆகும்.

Prabu Krishna said...

முதலில் மக்கள் உணர வேண்டும் இதனை. சமீபத்தில் ஒரு ட்வீட் பார்த்தேன். "தனியார் பள்ளி கட்டணம் குறைக்க போராடும் மக்கள் ஏன் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த போராடவில்லை.? ".. கல்வியை வியாபாரமாய் கல்வி நிறுவனங்கள் மட்டும் நினைக்கவில்லை, நாமும் அப்படித்தானே நினைக்கிறோம். பிச்சை போடாவிட்டால் பிச்சைக்காரன் வருவானா?, பக்தர்கள் இல்லை என்றால் கோவில் இருக்குமா? முதலில் நமக்கு தெரிய வேண்டும் நமது தேவை என்ன என்று.

Ram said...

சமச்சீர் கல்வியின் தரமும், பழைய அரசு பாடத்திட்டத்தின் தரமும் நிச்சயமாக ஒன்று அல்ல. //

ஒன்று அல்ல.. ஆனால் இதன் பாடதிட்டம் வகுக்கப்படும் கூட்டத்தில் பல முறை பங்கெடுத்த தோழர் ஒருவரோடு பேசுகையில் சட்டென தரத்தை மேலெழும்ப கொண்டுசென்றால் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு சிரமமாக போகும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக தரத்தினை உயர்த்துவதே முந்தைய அரசின் நோக்கம் என்றார்.

இப்போதைய அரசு சுட்டிகாட்டுவதும் இதே தரத்தை தானே.!

மாலதி said...

முதலில், மற்றவர்களில் இருந்து மாறுபட்டு, சமூக பார்வை கொண்டு இயங்கிவரும்,கழுகுகிற்கும்,கழுகின் பதிவுகளுக்கும் , கழுகில் அங்கம் வகிக்கும் ஏனைய பதிவருக்கும் என் வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் தம்பி கூர்மதியன்

சிந்தனை நன்று. பொதுவாக தற்போதைய அரசு முந்தைய அரசின் செயல்களை மாற்றுவதில் குறியாக, வேகமாகச் செயல் படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சம்ச்சீர் கல்வி என்பது உச்ச நீதி மன்றத்தின் அனுமதியுடன் தான் கொண்டு வரப்பட்டது. முந்தைய முதல்வரின் சுய விளமபரச் செயல்கள் சில, புத்தகங்களில் ஆவணப் படுத்தப் பட்டு விட்டன. காந்தங்கள் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் படமாக வெளியிடப் பட்டது போன்ற சில செயல்கள் கல்வியாளர்களின், அதிகாரிகளின் செயலாக, அதிக ஆர்வத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அதனை அப்படியே விட்டு விட்டு அடுத்த பதிப்பில் மாற்றி இருக்கலாம். அதை விடுத்து அதன் மேல் பச்சை வண்ணத்தில் தாள்கள் ஒட்டப்படுவது ஏற்கத்தக்கதல்ல. பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப் படுவதும், சில பக்கங்களில் தாள்கள் ஒட்டப்படுவதும் புததகங்களின் அழகினைக் கெடுத்து, மாணவர்களிடையே வெறுப்பினைப் பரப்பும். பொறுத்திருக்கலாம் உயர் நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Karthick Chidambaram said...

‘‘நான் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இல்லை.. எனது எதிரி கருணாநிதியை பழிவாங்கும் நோக்கில் தான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.// :(((

ராவணன் said...

கருணாநிதி என்ற நபரின் அரிச்சுவடியே எங்கும் இருக்கக் கூடாது.

கருணாநிதி என்று ஒரு ஊழல் நபர் இருந்தார் என்று வருங்காலம் உணராமல் இருந்தால் நல்லது.

சேலம் தேவா said...

நம்பி ஓட்டு போட்டதுக்கு நல்லா கொடுக்கறாங்கைய்யா சோதனை..!! :(

Anonymous said...

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்



www.tamil10.com
நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

உன் ஆதங்கமே என் ஆதங்கம்... தேர்ந்தெடுத்தாச்சு என்ன செய்ய?

Anonymous said...

ஸ்டேட் போர்ட் ம‌ற்றும் மெட்ரிக் பாட‌திட்டங்க‌ளோடு ச‌ம‌ச்சீர் பொதுபாட‌திட்ட‌த்தை ஒப்பிடுவ‌து த‌வ‌று...

இதுவ‌ரை ஸ்டேட் போர்ட் ஆக‌ட்டும் மெட்ரிக் ஆக‌ட்டும் மாண‌வ‌ர்க‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வ‌ச்சு மார்க் எடுக்க‌ வைக்குற‌துல‌ தான் எல்லா ப‌ள்ளிக‌ளுமே மும்முர‌மா இருந்த‌ன‌...அதுக்கு சாத‌க‌மா தான் தேர்வு முறையும் இருந்த‌து.

புத்த‌க‌த்தை முழுமையா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணாலே போதும். முழு ம‌திப்பெண் கிடைக்கும் அப்ப‌டிங்க‌ற‌ப்ப‌ புரிந்துப‌டிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. அவ‌ங்க‌ எதுக்கு மாண‌வ‌ர்க‌ளுக்கு புரிய‌வ‌ச்சு சொல்லி கொடுக்க‌னூம்னு ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ ம‌ட்டுமே வ‌ச்சாங்க‌. இது தான் எதார்த்த‌ உண்மை.

ஸ்டேட் போர்டுக்கும் மெட்ரிக்கும் உள்ள‌ வித்தியாச‌ம் என்ன‌ன்னு பார்த்தா

ஸ்டேட் போர்டு = 30 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌து

மெட்ரிக் = 300 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌து


300 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌துனால‌ அவ‌ங்க‌ள‌ பெரிய‌ ப‌டிப்பாளின்னு சொல்லிட‌ முடியாது...

Anonymous said...

ஸ்டேட் போர்டாவ‌து வ‌ய‌திற்கு த‌குந்த‌ பாட‌ங‌க‌ளை வ‌ச்சு ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வ‌ச்ச‌து ஆனால் மெட்ரிக் தான் ஸ்டேட் போர்ட‌ விட‌ மோச‌ம்...

சில‌ உதார‌ண‌ங்க‌ள்

"மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் 'நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப்பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங்கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள்."

==========================================

'சரி, உண்மையிலேயே சமச்சீர் கல்விக் கான பாடங்களின் தரம் குறைவானதாகத்தான் இருக்கின்றனவா?'' என்றபடி, அந்த பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தோம். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெயர்கள் வெளிவருவதை விரும்பதாவர்களாகப் பேசிய அவர்களின் குரலில், ஏகத்துக்கும் வேதனை யின் வலி.

''நடைமுறையில் இருக்கும் கல்வி, குருவித் தலையில் பனங்காயை வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, தேவையற்ற மன அழுத்தத்தை மாணவர்களுக்கு உண்டாக்கும் அளவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காகத்தான் சமச்சீர் கல்வியே உருவானது. ஐந்தாவது படிக்கிற மாணவனுக்கு என்ன தெரிய வேண்டுமோ... அதை, செயல்வழிக் கற்றல் எனும் முறையில் அந்த மாணவன் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் மாணவனின் ஆளுமையை, அறிவை, சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுயசிந்தனையை வளர்க்காத பாடத் திட்டத்துக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள், மூன்றே மாதங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து மார்க் வாங்குவதில் என்ன பலன் இருக்கும்?’' என்று கேள்வி எழுப்பியவர்கள்,

''இத்தனைக்கும் வெறும் ஆசிரியர் குழு மட்டுமே ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இவற்றையெல்லாம் தயாரிக்கவில்லை. எழுத் தாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய அளவில் புகழ் பெற்ற நிபுணர்கள் என்று பலரையும் வைத்துத்தான் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி = விக‌ட‌ன்

======================================

Anonymous said...

மேலும் எப்ப‌ பார்த்தாலும் பிள்ளைங்க‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வைக்கிற‌துல‌ எப்ப‌டி அவ‌ங்க‌ அறிவு வ‌ள‌ரும்.

இது எல்லாத்துக்கும் மாற்று தான் இந்த‌ ச‌ம‌ச்சீர் முறை....

ஒரு உதார‌ண‌ம் நாம் தாவ‌ர‌விய‌ல் பாட‌த்துல‌ இலைக‌ள் ப‌த்தியும் அது வ‌கைக‌ள் ப‌த்தியும் ப‌டிக்க‌றொம்...அதை க‌த்துக்க‌


ப‌ழைய‌ க‌ல்வி முறைப்ப‌டி (மெட்ரிக் + ஸ்டேட் போர்ட்)

ஆசிரிய‌ர் : இது தான் இலைக‌ள் ப‌த்தின‌ பாட‌ம் ரொம்ப‌ முக்கிய‌மான‌ கேள்வி...தொட‌ர்ந்து 5 வ‌ருஸ‌மா ப‌ழைய‌ கொஸ்டின் பேப்ப‌ர்ல‌ கேட்டுக்கிட்டே இருக்காங்க‌...ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணிக்கோங்க‌... முக்கிய‌மா ப‌ட‌த்த‌ வ‌ரைச்சு வ‌ரைஞ்சு பாருங்க‌...எழுதி எழுதி பாருங்க‌...அப்ப‌ தான் ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ஆகும்.


அதுக்கு டிப்ஸ் வேற‌ கொடுப்பாங்க‌ பாருங்க‌.

வ‌ல்லாரை சாப்பிடு (நியாப‌க‌ச‌க்திக்கு), காலையில‌ எழுந்த‌துமே ப‌டிச்சா ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ஆகும். அப்ப‌டியே ம‌ன‌சுல‌ ப‌திஞ்சிடும்....

மாண‌வ‌ன் உண்மையிலேயே அந்த‌ பாட‌த்தை க‌ற்று கொள்ள‌ ச‌ந்த‌ர்ப்ப‌மே கொடுக்க‌ற‌து இல்ல‌....

Anonymous said...

ச‌ரி இதுவே ச‌மச்சீர் ப‌டி எப்ப‌டி இருக்கும்னு பார்ப்போம்.

ஆசிரிய‌ர் : எல்லோரும் உங்க‌ வீட்டுக்கு ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ம‌ர‌ம், செடி, கொடில‌ இருக்க‌ற‌ இலை, பூ ப‌த்தி நோட் ப‌ண்ணி ஒரு நொட்புக்ல‌ எழுதி கொண்டு வாங்க‌...அத‌ ப‌த்தி நாம‌ கிளாஸ்ல‌ டிஸ்க‌ர்ஸ‌ன் ப‌ண்ண‌லாம்.... நாளைக்கு மினிம‌ம் ஒரு 10 வ‌கையான‌ இலைக‌ள் கொண்டு வ‌ர‌ணும்...(இது தான் ஹோம் ஒர்க்).


அடுத்த‌ நாள் ஆசிரிய‌ர் மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ இருக்க‌ற‌ வித‌வித‌மான‌ இலைக‌ளை வ‌ச்சு அந்த‌ இலைக‌ளை வ‌கைப்ப‌டுத்துறார். ஒவ்வொரு மாண‌வ‌ர்க‌ளும் தான் பார்த்த‌ செடி, கொடி ப‌த்தி விள‌க்க‌ம் கொடுக்க‌றாங்க‌.

இப்போ புத்த‌க‌த்தின் துணையோடு அதை ப‌த்தி விள‌க்க‌ம் கொடுக்க‌றார்...சில‌ கேள்விக‌ளை மாண‌வ‌ர்க‌ள் கிட்ட‌ கேட்கிறார்...அவ‌ர்க‌ள் இப்பொ தான் க‌ற்கிறார்க‌ள்...அதுக்கு பிற‌கு புரிந்து கொள்கிறார்க‌ள்...

===============


இந்த‌ க‌ல்வி முறை எப்ப‌டி இருக்கு....இப்ப‌டி தான் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐஜிசிஎஸ்சி போன்ற‌ க‌ல்வி முறைக‌ள் பாட‌ம் ந‌ட‌த்திக் கோன்டு இருந்த‌ன‌...அதுனால‌ தான் அவ‌ங்க‌ளால் ஐஐடி,ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற‌ க‌ல்லூரியில் எளிதாக‌ நுழைய‌ முடிந்த‌து...இந்த‌ முறையை முத‌ன்முத‌லாக‌ பொதுபாட‌திட்ட‌ம் வ‌ழியாக‌ நம் மாண‌வ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ப் போகுது... சோ மெட்ரிக் கூட‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வி முறையை ஒப்பிட‌முடியாது....ஆங்கில‌ம் க‌ற்பிப்ப‌து த‌விர‌ அதில் பிர‌மாத‌மாக‌ ஒன்றும் இல்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes