Tuesday, June 28, 2011

கறுப்பு பணம் என்னும் அரக்கன்..! ஒரு பொருளாதாரப் பார்வை...!




கறுப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கறுப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கறுப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கறுப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கறுப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல்வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.

அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம் என சொல்கிறார்கள்... இவ்வளவு பணம் நம் நாட்டை விட்டு எப்படி போகிறது...? 

இந்த பணம் எங்கு இருந்து இவர்களுக்கு வருகிறது...எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்தான் இப்படி மலை போல் குவிந்து கிடக்கிறது, இன்னும் பல பெரும் தொழிலதிபர்கள் செய்யும் சேட்டை தான் அந்த மலைகள் குட்டி போடுகிறது சிலர் இப்படி வரிகட்டாமல் இருப்பதால் மக்களுக்கு தான் பெரும் துன்பம், அரசுக்கு வருவாய் இல்லை என்று சாமானிய மக்கள் வாங்கும் தீப்பெட்டி மீது வரி உயரும்.

சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது, இந்த பணம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்தால், நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். மேலும் இந்த பணத்தை வங்கியில் போட்டவர்களுடைய வாரிசுகளுக்கே அந்த வங்கியில் பணம் இருப்பது தெரியவில்லை, அந்த பணம் எல்லாம் முடங்கி போய் உள்ளது, இந்த பணம் மீண்டும் கிடைத்தால் அதை வைத்து நம் நாட்டின் கடனை அடைத்து விடலாம்....பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இவர்கள் பெயர்கள் தான் முன்னிலையில் இருக்கும் அதனால் தான் கூற மறுகிறார்கள்...இவர்களுக்கு பணம் தரும் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள், இவர்களுக்கு நிதி தரமாட்டார்கள், அந்த பட்டியலை வெளியிட்டால் இவர்களுக்கு என்ன லாபம், அதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக்குழு பொது கணக்குக்குழு என கூச்சல் போடும் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை ஏன் என்றால் அவர்கள் பணமும் அங்கே இருக்கிறது....சாமானிய மக்களின் வங்கியில் அவன் வைத்து இருக்கும் இருப்பு தொகை கூட இருக்காது ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் அதை முடக்கி வேறு வைத்து உள்ளார்கள். 



பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்பது எல்லாம் இரண்டாம் பிரச்சனை நம் கடமையை ஒழுங்காக செய்வோம் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 

15 comments:

cheena (சீனா) said...

அன்பின் கழுகு - உண்மை - வெளி நாட்டு வங்கிகளீல் உள்ள - இந்தியர்களுக்குச் சொந்தமான பணத்தை - இங்கு கொண்டு வர முயற்சி எடுத்தால் - நமது நாடு சுபிட்சமடையும். அரசு செய்யுமா பார்க்கலாம். நல்வாழ்த்த்துகள் கழுகு - நட்புடன் சீனா

Prabu Krishna said...

பன்றி சாக்கடையை விட்டு வருமா? நாம்தான் விரட்ட வேண்டும்.

முனியாண்டி said...

அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு,/////

பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.///

கட்டுரையில் ஏன் இந்த முரண்பாடு? இரண்டரை லட்சம் கிடைக்கும் என்றால் ஏன் ஒரு லட்சம் மட்டும் கொடுக்க வேண்டும்?..அப்படியே ஒரு லட்சம் கொடுத்துவிட்டால் ஏழ்மை ஒழிந்துவிடுமா? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

முனியாண்டி said...

பெரும்பாலான வியங்களில் எல்லாரும் உணர்ச்சிபூர்வமாகவே சிந்திக்கின்றனர். 70 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள பணத்தை கொண்டுவருவது நடைமுறையில் எந்தளவு சாத்தியம்?

அப்படியே அவ்வளவு பனத்தை கொண்டு வந்தாலும், அதனால் வேறு என்னென்ன பொருளாதார விளைவுகள் ஏற்படலாம் என்று யோசித்தீர்களா? அளவுக்கதிகமான பணப்புழக்கத்தால் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டு, விலைவாசி 100 மடங்கிற்கு மேலும் உயரக் கூடும், ரூபாயின் மதிப்பும் அதளபாதாளத்தில் விழலாம், அது மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கலாம். வெளியில் இருந்து அவ்வலவு பணத்தை கொண்டுவந்து செலவு செய்வது ஏதோ வீடுகளில் நாம் செய்வது போல் சுலபமான விஷயம் அல்ல.

நாம் அரசிடம் இருந்து கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டியது, யார் யார் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்று வெளியிட்டு, அவர்களை தண்டிக்க சட்டரீதியினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் இனி இந்தியர்கள் யாரும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்குவதை தடை செய்ய வழிவகை செய்ய வேண்டும்! இதுதான் முறையாக இருக்க முடியும். அதை விடுத்து ஆளுக்கொரு ஒரு லட்சம் கொடுக்கிறேன், கடனை அடைக்கிறேன் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது.

முனியாண்டி said...

கட்டுரையை எழுதியவர் யார் என்று தெரியவில்லையே? எனது கருத்திற்கு பதில் கிடைக்குமா?

கழுகு said...

அன்பின் முனியாண்டி சார்....!


எதுவே இல்லாமல் இருப்பதற்கு பணத்தை கொண்டு வருவது பெட்டர் இல்லையா...! சீர்திருத்தம் இதை வைத்து வருவதல்ல தெளிவான மனித அறிவுகள் வைத்து வருவது.

குறைந்த பட்சம் இத்தகைய நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நோக்கிலும்....பணம் முடங்கிக் கிடப்பதை விட பகிரப்படலாம் என்ற கனவினையும் பொதுவில் வைத்திருக்கிறோம்.

கண்டிப்பாக சமூக சீர்திருத்தம் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு இருக்கிறது. வரவேற்கிறோம்....

தாங்கள் ஏன் கழுகிற்கு ஒரு கட்டுரை எழுதி கொடுக்கக் கூடாது...! உங்களை போன்ற தெளிந்த பார்வையுடைவர்கள் கண்டிப்பாக அதை அனைவருக்கும் பகிர்தல் நலம் தானே..?

படிக்காதவன் said...

ஏதோ ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரையை போல இருக்கிறது. அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என சொல்கிறீர்களே ஒழிய.... பதிவில் ஒரு உறுதியான நிலை தெரியவில்லையே? உங்களுக்கே குழப்பமா....

முனியாண்டி said...

@ கழுகு,
தனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு எனக்கு பொருளாதார அறிவில்லை. அதே நேரத்தில் விழிப்புணர்வு கட்டுரைகள் உணர்ச்சிமயமாக இருத்தல் கூடாது. ஆழ்ந்த, யதார்த்தமான கருத்துக்கள் இருக்க வேண்டும். இதையே சுட்டிக் காட்டினேன். நன்றி!

வெங்கட் said...

@ கழுகு.,

" இனிமேல் கழுகில் அனானி பதிவுகள்
வராது " என்ற உறுதிமொழியை காற்றில்
பறக்க விட்ட கழுகு..

// ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது
என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள்
பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்
கூறுகிறார். //

கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றும்
நம் பிரதமரை குறை சொல்வதை
நான் கண்டிக்கிறேன்..!

வெங்கட் said...

// தாங்கள் ஏன் கழுகிற்கு ஒரு கட்டுரை
எழுதி கொடுக்கக் கூடாது...! //

@ முனியாண்டி சார்..,

கட்டுரை எழுது போது.. நீங்களாச்சும்
யாருக்கும் பயப்படாம உங்க பெயரை
போடுங்க சார்..

வெங்கட் said...

// சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு
கருப்பு பணம் என்றால் என்னவென்று
தெரியும்....என தெரியவில்லை //

கட்டுரையை எழுதிய அனானி கட்டுரையாளருக்கு
கூடத் தான் தெரியவில்லை..

அது "கருப்பு " பணம் அல்ல..
" கறுப்பு " பணம்..!

சௌந்தர் said...

@வெங்கட்

கட்டுரையின் சாரத்தை மட்டும் பாருங்கள் வெங்கட் சரியா?

அதிலே கேள்வி இருந்தால் கேளுங்கள்...!

ஸ்பெல்லிங் மிஸ்டேகை சுட்டி காட்டியதற்கு நன்றி...!!!

வெங்கட் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

@ சௌந்தர்.,

// கட்டுரையின் சாரத்தை மட்டும்
பாருங்கள் வெங்கட் சரியா?
அதிலே கேள்வி இருந்தால் கேளுங்கள்...! //

சரிங்க... சௌந்தர்..

// " இனிமேல் கழுகில் அனானி பதிவுகள்
வராது " என்ற உறுதிமொழியை காற்றில்
பறக்க விட்ட கழுகு.. //

ஆனா இந்த கேள்வி கட்டுரை சம்பந்தமான
கேள்வி இல்லையா..? உங்க பிளாக்
சம்பந்தமான கேள்வி இல்லையா..?!

முதலில் கேள்வி கேட்டால் நேரடியாய்
பதில் சொல்லி பழகுங்கள்.. சரியா..?!!

சௌந்தர் said...

@ வெங்கட்

சரிங்க கருத்திற்கு நன்றி

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes